மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 24-செப். 2026

 

மேஷ ராசி

அன்பர்களே! வெற்றியான காரியங்கள் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களின் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். தொழில்துறையில் மேன்மைகள் உண்டாகும். காப்பீட்டு துறையில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படும். பொருள் வரவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி வந்து சேரும். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி ஆதரவாக இருக்கும். பண வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். சிறப்பு பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதானமாக செயல்படவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார லாபம் அடைவார்கள்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டு. தொழிலில் மனதின்மையோடு ஈடுபடுவது.

இன்று உங்கள் பலவீனம்:

உறவினர்களின் விரோதமான போக்கால் ஏற்படும் சசலசலப்பு. உடல் சோர்வு அடிக்கடி ஏற்படுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பண வரவு செலவுகளில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

2 சாலையை கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

3 குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல வேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி

அன்பர்களே! முக்கியமான செய்திகள் வந்து சேரும் நாள். வீட்டு தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். மந்தமாக இருந்த விற்பனை அதிகரிக்கும். சில யோகமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி பணம் வரும் சூழ்நிலை உருவாகும். வியாபாரம் உயர்வாக நடக்கும். தொழில்துறையிலிருந்த எதிர்ப்புகள் மறையும். பணவரவு அதிகரிக்கும். பங்குச்சந்தையில் வருமானம் உயரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யோக பலன் அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்: வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேர்வது. அரசு வேலைகள் சுணக்கம் இல்லாமல் நடப்பது. இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் ஏற்படும் சிறிய தவறுகள். குறித்த நேரத்தில் காரியம் முடிக்க முடியாத தடுமாற்றம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆடம்பரமாக செலவு செய்வது சிரமத்தை தரும். 2 ஆன்லைன் வர்த்தகங்களில் எச்சரிக்கை தேவை. 3 குடும்ப விஷயங்களை வெளியில் பேசுவது கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி

அன்பர்களே! உயர்வான பலன்கள் அதிகரிக்கும் நாள். வேலை உயர்வு கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும் . வீட்டுப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரித்து வங்கி இருப்பை உயர்த்துவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வெளியூரில் இருந்து சூப்பர் செய்தி வந்து சேரும். தொழில் சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும். குழந்தைகளின் எதிர்கால விஷயங்களில் அக்கறை அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வி மேன்மை பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்:

புதிய முயற்சியில் வியாபாரத்தை அணுகுவீர்கள். தொழிலுக்கு வந்த தடை தானாக மறையும். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் அதிரடியான பேச்சு மனதை சங்கடப்படுத்தும். அவசரமான வேலை தாமதமாக நடக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் நிதானம் தவறக்கூடாது. 2 மற்றவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. 3 பணம் வரவு செலவுகளில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி

அன்பர்களே! வேண்டியது கிடைக்கும் நாள். இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் காட்டும் அக்கறையால் வருமானம் பெருகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். வங்கியில் கையிருப்பு அதிகரிக்கும். வேலை இடத்தில் மதிப்பு கூடும். அரசு வேலையில் எதிர்பார்த்த காரியம் நடக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு போவதற்கான ஏற்பாடு நடக்கும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக நன்மை பெறுவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதிப்பு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலுக்கு தேவையான உதவி உடனே கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சில நேரங்களில் அலட்சியமாக நடப்பது. மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டு தேவைகளை நிறைவேற்ற தாமதம் கூடாது. 2 பிள்ளைகளின் கல்வி செலவு உடனே நிறைவேற்றப்பட வேண்டும். 3 வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி

அன்பர்களே! ஏற்றமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு வந்து சேரும். ஊதிய உயர்வு உண்டாகும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் சிறந்த லாபம் வந்து சேரும். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகள் மறைந்து போகும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு மறையும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் நிவர்த்தியாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்கள் பலம்: முழு முயற்சியோடு எந்த செயல்களிலும் இறங்குவீர்கள். புதிய கண்ணோட்டத்தில் தொழிலை மேம்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: திடீரென்று ஏற்படும் செலவுகள் தடுமாற்றம் அடைய செய்யும். வாகனமும் சிக்கலை ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நேரம் தவறாமல் வேலைக்குச் செல்ல வேண்டும். 2 போனில் வரும் ஆசை வார்த்தைகளை நம்பக்கூடாது. 3 சாப்பாட்டு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

 

கன்னி ராசி

அன்பர்களே! நல்ல செய்திகள் கிடைக்கும் நாள். சொந்த ஊரில் மரியாதை உயரும். சிறப்பான தொழில்நுட்ப செயல்களில் வியாபாரத்தை அதிகரிப்பீர்கள். முதலாளியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து போகும். எதிர்ப்புகளால் வந்த பிரச்சனைகள் தீரும். பொருளாதார வரவு போதுமான அளவில் இருக்கும். வரவுக்கு தகுந்த செலவுகள் வந்து சேரும். எதிரிகளாக இருந்தவர்கள் உதவி செய்வார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எந்த தடையையும் தாண்டி செல்லும் உறுதியோடு செயல்படுவது. கணக்குப் போட்டு காரியம் செய்வது. இன்று உங்கள் பலவீனம்: மன சங்கடத்தால் இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது. வியாபாரத்தில் ஏற்படும் சிறிய தடைகள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 2 வேலை இடத்தில் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். 3 அவசியமில்லாத ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம்.. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி

அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். மன நிம்மதி அதிகரித்து நம்பிக்கை கூடும். வெளியூர் பயணங்கள் அனுகூலத்தை கொண்டு வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். பொருளாதாரம் வரவு அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் பதவி உயர்வு அடைவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மையான பலன் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சம்பள உயர்வு வந்து சேரும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

நீங்கள் நினைத்த செய்தி வெளியூரிலிருந்து வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

விளைவுகளை எதிர்பார்க்காமல் சில காரியங்களில் இறங்குவது. எதற்கெடுத்தாலும் கோபப்படுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வாகனங்களின் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2 வரவு அறிந்து செலவு செய்யும் சிந்தனை வேண்டும்.

3 மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 6,3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி

அன்பர்களே! வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழில்துறையில் மேன்மை நிலை உருவாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். யோக பலன்கள் சிறப்பாக நடக்கும். வரவு அதிகரித்து பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் அனுசரணை சிறப்பு சேர்க்கும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரத்து கூடும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் தொழிலாபம் சிறப்படையும். இன்று உங்கள் பலம்: எப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு வேலை செய்வது. தன்னம்பிக்கையோடு தொழிலுக்கு முதலீடு போடுவது. இன்று உங்கள் பலவீனம்: உங்களைப் புரிந்து கொள்ளாமல் மனைவி நடந்து கொள்வது. அடுத்த ஒரு விஷயத்தில் மூக்கை நுழைப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை செய்யும் இடத்தில் சோம்பேறித்தனம் கூடாது. 2 நல்ல விஷயமாக இருந்தாலும் அலட்சியம் கூடாது. 3 பிள்ளைகள் மேல் கோபம் கொள்ள கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்

 

தனுசு ராசி

அன்பர்களே! சிறப்பான செய்திகள் வீடு தேடி வரும் நாள். அக்கறையுடன் செயல்படுவதால் தொழில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வந்து சேரும். பூர்வீக சொத்து ப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். அலங்கார பொருட்கள் வாங்குவீர்கள். போட்டிகளை சமாளிக்கும் திறன் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தொழில் லாபம் கூடும் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். இன்று உங்கள் பலம்: நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தேவையான உதவிகளை செய்யும் நண்பர்கள் போக்கு. இன்று உங்கள் பலவீனம்: பிள்ளைகளின் அக்கறை இன்மையால் மனச்சங்கடம் ஏற்படும். வயிற்றுப் பிரச்சனை சிரமத்தை கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணப் பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 புதிய நண்பர்களின் பேச்சை அதிகம் நம்ப கூடாது. 3 மனைவி எண்ணத்துக்கு மாறுபட்டு நடக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி

அன்பர்களே! திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும் நாள். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு உண்டாகும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பணி மாறுதல் உண்டாகும். சம்பளம் உயர்ந்து சந்தோஷம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி மன நிம்மதி கொடுக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்றமான பலன் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உதவிகள் தேடி வரும். இன்று உங்கள் பலம்: நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த ஒரு தேவை பூர்த்தியாகும். அரசியல்வாதிகள் நட்பு பலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கோபப்படுவீர்கள். சாப்பாட்டு விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டுக் குறையை மற்றவரிடம் சொல்லாதீர்கள். 2 அலுவலகத்தில் சக ஊழியரிடம் கவனமாக இருங்கள். 3 வரவு செலவு கணக்கு சரியாக எழுதப்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

 

கும்ப ராசி

அன்பர்களே! சிறப்பான செய்திகள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் சரியாகும். தொழிலில் முன்னேற்றமான லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இடர்பாடு விலகி வருமானம் கூடும். அரசு ஊழியரின் கையில் பணம் புரளும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். விருப்பப்பட்ட இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: பார்ட்னர்களில் முழு ஒத்துழைப்பு தொழிலில் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: வருகின்ற வாய்ப்பில் அலட்சியமாக இருப்பது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுப்பில்லாமல் நடப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியில் செல்லும்போது கதவை கவனமாக பூட்ட வேண்டும். 2 மனைவியின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். 3 பங்குச்சந்தையில் நிதானமாக இறங்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

 

மீன ராசி

அன்பர்களே! சிரமங்கள் விலகும் நாள். கைக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகி சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வெகு சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் தொழிலில் மிகுந்த லாபம் உண்டாகும் . குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். முனைப்போடு இறங்கி தொழிலில் முன்னேற்றத்தை கொண்டு வரும் நிலை உருவாகும். உறவினர்களின் செயல்கள் சிரமப்படுத்தும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வேலை உயர்வு ஏற்படும் .

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தன வரவு அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் உடல் நலம் சிறப்படையும். இன்று உங்கள் பலம்: அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்கள் தேவையை பூர்த்தி செய்யும். நண்பர்களின் உதவி பலப்படுத்தும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்கள் வீட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம். புதிய நண்பர்களின் பேச்சை ஆர்வமாக கேட்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியூர் பயணங்களில் பணம் பொருள்கள் பத்திரம். 2 மனைவியின் மனதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். 3 பிள்ளைகள் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 7 – புரட்டாசி – பராபவ வருடம் வியாழன் நாள் வியாழன் திதி திரயோதசி (up to 11:18 pm) சதுர்தசி (up to September 25, 11:07 pm) நட்சத்திரம் அவிட்டம் (up to 10:35 am) சதயம் (up to September 25,11:22 am) யோகம் சித்த-மரண யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 12:15 – 1:15 pm கௌரி நல்ல நேரம் 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 1.30 – 3.00 எமகண்டம் காலை 6.00 – 7.30 குளிகை காலை 9.00 – 10.30 சூலம் தெற்கு பரிகாரம் தைலம் சந்திராஷ்டமம் ஆயில்யம் சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 6:00 PM சந்திரோதயம் Sep 24 4:28 PM சந்திர அஸ்தமனம் Sep 25 4:33 AM