இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மயிலிட்டி துறைமுகத்தில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தப் படகுகளில் சில இந்திய தரப்பிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில இலங்கை மீனவர்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள சுமார் 90 படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



