துப்பாக்கிச் சூட்டில் துருக்கி பாடசாலைக்குள் 11 மாணவர்கள் காயம்

 

துருக்கியில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 மாணவர்கள் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆன்லைன் பாடங்கள் கற்பீர்

துருக்கியின் மேற்கில் மணீசா மாகாணத்தில் உள்ள குறித்த பாடசாலைக்கு துப்பாக்கியுடன் சென்ற மாணவர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் 11 மாணவர்கள் காயமடைந்ததையடுத்து, பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, பொலிஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர், அவரது பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.