சவுதி அரேபியா – ஹவுதி மத்தியிலான போர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் முக்கிய வர்த்தக திருப்பம் ஏற்பட்டு உள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி ஹவுதி படைகள் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் சவுதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு கச்சா எண்ணெய் பைப்லைனை சேதப்படுத்தியது மூலம் செங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் மொத்தமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 8 நாட்களாக நடத்து வரும் ரிப்பேர் பணிகள் மூலம் கிழக்கு – மேற்கு எண்ணெய் பைப்லைன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் செங்கடலில் உள்ள Yanbu துறைமுகத்தில் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் முடக்கியிருந்த காரணத்தால் சவுதி அரேபியா அரசு East-West Pipeline வாயிலாக தினமும் சுமார் 40 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை Yanbu துறைமுகத்துக்கு மாற்றி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது குறிப்பிடித்தக்கது. ஹவுதிகளின் தாக்குதல் மூலம் இந்த 40 லட்சம் பேரல் சப்ளை மொத்தமாக முடங்கியது. 40 லட்சம் பேரல் என்பது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவின் எண்ணெய் உற்பத்தி வயல்களை மேற்கு பகுதியில் இருக்கும் செங்கடலை இணைக்கும். இதன் மூலம் சவுதி அரேபியா ஹார்முஸ் வழியாகவும், சூயஸ் கால்வாய், பாம் அல் மண்டெப் வழி என உலக நாடுகளுக்கு சப்ளை செய்து வருகிறது. தற்போது கிழக்கு – மேற்கு எண்ணெய் பைப்லைன் ரிப்பேர் பணிகள் முடிந்துள்ள காரணத்தால் கச்சா எண்ணெய் சப்ளை அடுத்த சில நாட்களில் சரியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் எதிரொலியாக இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 2 டாலர் குறைந்து பிரெண்ட் கச்சா எண்ணெய் 99.84 டாலருக்கு குறைந்துள்ளது.
இதேவேளையில் சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் சப்ளையை மீண்டும் வளைகுடா நாடுகள் வழியாக செய்ய கடந்த 3 நாட்களாக திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதற்காக ஒமான் மற்றும் இதர வளைகுடா நாடுகளின் துறைமுகத்தில் இருந்து சவுதி ஆராம்கோ சுமார் 14 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை 7 பெரும் எண்ணெய் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் Ras Tanura துறைமுகத்தில் லோடு செய்துள்ளது.



