கம்பஹா, படல்கம பகுதியில் உள்ள மா ஓயா ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு ஆணின் உடலமும் ஒரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 இளம் பெண்கள் மற்றும் பதின்ம வயது இளைஞன் அடங்கிய குழுவினர் மா ஓயா ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர்.
அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களில் ஒரு இளம் பெண் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, அவரை மீட்க முயன்ற ஏனைய மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியை உள்ளூர் மக்களும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.



