மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 30-2026

 

மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எந்த விஷயமாக இருந்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாக எடுக்க வேண்டும். ஏதாவது குறை இருந்தாலும் அது பின்னல் நிவர்த்தியாகும். வியாபாரத்தில் லாபமும் வருமானமும் சற்று குறைவாக இருக்கும். உறவினர்கள் விஷயத்தை நிதானமாக பேசி தீர்க்க வேண்டும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் குறைவாக கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களில் சிரமம் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் வேலை இடத்தில் பிரச்சனைகள் உண்டாக்கலாம்.ஒஒ இன்று உங்கள் பலம்: வேலை விஷயத்தில் சுறுசுறுப்பாக காரியத்தை முடிக்க வேண்டும். உறவினர்கள் உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் பணவரவு கம்மியாக இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்கள் பாதிப்பை உண்டாக்கும். 2 புதிய நண்பர்களும் குடும்ப விஷயத்தில் பேசாதீர்கள். 3 வெளியூர் பயணங்களை தள்ளிப் போடுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

 

ரிஷப ராசி அன்பர்களே! சிறப்பான பலன் வந்து சேரும் நாள். தொழில்துறைகள் முன்னேற்றமாக நடக்கும். வருமான அதிகரிப்பு இருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தொழிலுக்கு ஏற்படலாம். ஆனால் அது மறைந்து போகும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் அதிகரிக்கும் ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாமதம் இல்லாமல் காரியம் அடக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆபரண யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கலாம். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: எடுத்த காரியத்தில் ஏதாவது விலகுறு வரலாம். வெளியூர் பயணங்களில் சிரமம் உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடிகளில் மயங்கி விடாதீர்கள். 2 வரவு செலவு கணக்கு கவனமாக எழுதுங்கள். 3 ஆடம்பரமாக செலவுகள் செய்யாதீர்கள். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! மேன்மையான நன்மைகள் வந்து சேரும் நாள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் நிதானமாகவும் கவனமாகவும் முடிவு எடுப்பது நல்லது. இருந்தாலும் எந்த பாதிப்பும் வராது. தொழில் ஏற்பட்ட விமர்சனங்களும் மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து போகும். பண வரவு தாராளமாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேண்டியதை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழும் செல்வாக்கும் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கான பண உதவி பணத்தை புரட்டுவீர்கள். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: மற்ற ஒரு விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துங்கள். 2 அதிக வட்டிக்கு ஆசைப்படாதீர்கள். 3 இரவு நேர பயணத்தை ஒத்தி போடுங்கள். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! அதிரடியான யோகம் வரும் நாள். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். மற்றவர்களின் மறைமுக எதிர்ப்பும் விமர்சனங்களும் மாறும். குடும்ப பிரச்சினைகள் மனம் விட்டு பேசி தீர்க்கப்படும். வேலை இடத்தில் பதவி உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடக்கும். வாகன யோகம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேண்டிய நன்மைகள் நடக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமையும் புகழும் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு உறவினர்கள் உதவலாம். குடும்பத்தினர் ஒத்தாசை இருக்கும். தேவையான பண உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசுவீர்கள்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இறங்குங்கள். 2 வேலை இடத்தில் அனாவசியமாக பேசாதீர்கள். 3 ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! உயர்வான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். தொழிலுக்கு உதவியாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடக்கும் கையில் தாராளமாக பணம் புழங்கும். குடும்ப விஷயங்களில் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சில குழப்பங்கள் ஏற்படலாம். அதனால் எந்த வித பாதிப்பும் வராது. வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதிப்பு உயரும். இன்று உங்கள் பலம்: தொழில் துறைகளில் இருந்த நிறை குறைகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்கால திட்டம் குறித்து முடிவு எடுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: குழந்தைகள் வழியில் ஏதோ சஞ்சலம் உண்டாகும். கவனமாக வேலை செய்ய முடியாத அளவிற்கு சிந்தனை இருக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்குகளை சரியாக எழுதுங்கள். 2 குறித்த நேரத்தில் வேலைக்கு செல்லுங்கள். 3 மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லுங்கள். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! வெற்றிகரமான பலன் கிடைக்கும் நாள். வேலை விஷயத்தில் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் முடிவு எடுக்க வேண்டும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை யோசித்து தீர்மானிக்க வேண்டும். சில பிரச்சனைகள் உருவானாலும் அது மறைந்து போகும். வியாபாரத்தில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். வேலை இடத்தில் உங்களின் தேவை உணரப்படும். பெரியோர்களின் ஆதரவு உண்டு. சிறப்பான பலன் நடக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி மாற்றம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டில் இருந்து உதவிகள் வந்து சேரலாம். உறவினர்கள் ஒத்தாசையும் இருக்கும். பண வரவும் கைகொடுக்கும். இன்று உங்கள் பலவீனம்: குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல மாட்டீர்கள். மற்றவர் பேச்சு அதிகமாக நம்புவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடாதீர்கள். 2 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள். 3 பங்கு பரிவர்த்தனையில் நிதானமாக இருங்கள். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழில் சுறுசுறுப்பாக நடக்கும் வியாபாரம் வெகு சிறப்பாக நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும் . இன்று உங்கள் பலம்: புதிய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் இறங்குவீர்கள். அரசாங்க உதவி பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: பண வரவு செலவுகளில் சிரமத்தை எதிர் நோக்கலாம். திடீர் செலவுகளில் சிரமப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வீட்டை கவனமாக பூட்டிவிட்டு வெளியே செல்ல வேண்டும் 2 இரவு நேர பயணங்களில் தவிர்க்க வேண்டும். 3 பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! இன்று முக்கியமான சம்பவங்கள் நடக்கும் நாள். குடும்பத்தில் சுகபோகம் அதிகரிக்கும். தொழிலில் வருகின்ற வருமானத்தால் வங்கி இருப்பு உயரும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வியாபாரத்தை அதிகரிக்க செய்வீர்கள். போட்டிகளும் பொறாமைகளும் விலகும். நோய் தொல்லைகள் நீங்கும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பயிர்த்தொழில் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். சேம லாபங்கள் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் உருவாக்கு உயரம். கேட்டை நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை நிறைவேறும். இன்று உங்கள் பலம்: உடல் சோர்வு இருந்தாலும் மன சோர்வு அடைய மாட்டீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பை பலத்தோடு வைத்திருப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வீட்டில் நடக்கும் குழப்பங்கள் மன அமைதியை கெடுக்கும். தொழிலில் கவனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பெரிய தொகைகளை வங்கிக்கு அலட்சியமாக எடுத்துச் செல்லக் கூடாது. 2 அதிக லாபம் கிடைக்கும் என்று அகலக்கால் வைக்க கூடாது. 3 போனில் வரும் ஆசை வார்த்தைகளை கவனத்தில் எடுக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! நன்மைகள் வீடு தேடி வரும் நாள். வியாபாரம் அமோகமாக நடக்கும். செல்வாக்கு பெருகும். எந்த விஷயத்திலும் நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். சில குறைகள் ஏற்படலாம். ஆனால் அதனால் எந்த சிக்கலும் வராது. பொருளாதார வரவு அதிகமாக இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வேறு இடத்தில் பெருமையும் பெருமிதமும் கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான காரியங்கள் நடக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச் சேர்க்கை உண்டாகும் இன்று உங்கள் பலம்: தொழிலை செம்மையாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் உதவி வரலாம். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் சில பாதிப்புகள் வரலாம். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய உதவி தாமதமாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களில் கவனத்தை சிதற விட வேண்டாம். 2 தொலைபேசி ஆசிவ வார்த்தைகளை நம்ப வேண்டாம். 3 இரவு நேரத்தில் வெளியில் தங்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! நன்மையான காரியங்கள் நடக்கும் நாள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் எந்த விஷயத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் முடிவெடுக்க வேண்டும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்த காரியம் நடக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வங்கிக் கடன் வந்து சேரலாம். வியாபாரத்தை திட்டமிட்டு நடத்துவீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் சோம்பேறித்தனமாக செயல்படுவீர்கள். நாளை பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பற்று வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை 2 அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.. 3 உறவினர்கள் விஷயத்தில் ஒதுங்கி இருங்கள். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். எந்த செயலிலும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து இறங்குவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். மனைவி குழந்தைகளின் மனப்போக்கை அறிந்து கொண்டு நடக்க வேண்டும். சில குழப்பங்கள் வரலாம் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு உண்டாகாது. வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் அதிகரித்து கையிருப்பு கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன தன லாபம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வப் பெருக்கு உண்டாகும். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு நிதானமாக வேலை செய்வீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கலாம். நண்பர்கள் ஒத்தாசை உண்டு. இன்று உங்கள் பலவீனம்: எதிலும் அவசரப்பட்டு முடிவெடுத்து விடுவீர்கள். அடுத்தவரின் பேச்சை சுலபமாக நம்புவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் சூதாட்டங்களில் ஆசைப்படக்கூடாது. 2 பங்குப் பரிவர்த்தனையில் நிதானமாக நடக்க வேண்டும். 3 சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! வெற்றிகரமான காரியங்கள் நடக்கும் நாள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் நன்றாக யோசித்து நிதானமாக செய்வது நல்லது. குடும்ப விஷயங்களில் முடிவெடுக்கும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து எடுப்பது நல்லது. தொழிலுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் பாதிப்பை தராது. எந்த காரியத்திலும் உங்களின் வெற்றி தடைபடாது. பணவரவு தாராளமாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வச் சேர்க்கை ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் உதவிகள் கிடைக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டு செல்வ வளம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்பார்த்த உதவிகள் தானாக வரும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: ஆரோக்கியத்தின் சிறிய பாதிப்பு ஏற்படலாம். அனாவசிய செலவுகளால் சிரமப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அந்நிய பெண்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது 2 குடும்பத்தின் தேவை அறிந்து நடக்க வேண்டும் 3 நேரம் தவறாமல் சாப்பிடுவது முக்கியம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்

இன்றைய பஞ்சாங்கம் தேதி 13 – ஐப்பசி – பராபவ வருடம் வெள்ளி நாள் வெள்ளி திதி பஞ்சமி (up to 7:25 pm) சஷ்டி (up to October 31, 4:57 pm) நட்சத்திரம் மிருகசீரிடம் (up to 9:04 am) திருவாதிரை (up to October 31,7:12 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 12:15 – 1:15 am / 6:30 – 7:30 pm இராகு காலம் காலை 10.30 – 12.00 எமகண்டம் மதியம் 3.00 – 4.30 குளிகை காலை 7.30 -9.00 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை சூரியோதயம் 6:05 AM சூரிய அஸ்தமனம் 5:39 PM சந்திரோதயம் Oct 30 9:44 PM சந்திர அஸ்தமனம் Oct 31 11:09 AM