உக்ரைனில் 13 பேர் பலி 2 ரயில்கள் மீது ரஷ்யா தாக்குதல் 13 பேர் பலி

 

உக்ரைனில் உள்ள டினிப்ரோவில் ரயில் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு ரயில்கள் மீது ஜெட் எஞ்ஜின் பொருத்தப்பட்ட டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 13 பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் அதிபர் வெலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘டினிப்ரோவில் பயணிகள் ரயில்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் பயங்கரமான தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.