ரூ.27 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு!.. செம ஜாக்பாட்!…

 

தற்போது தவெக அரசு அமைந்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் தகுதி உடைய குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 7.50 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியை பெற முடியும் எனவும் 46 வகையான தீவிர நோய்களுக்கு குடும்பத்திற்கு 12 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

அதோடு கார்ப்பஸ் நிதி மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் வரை உதவி கிடைக்கும் என்பதால் மொத்தம் ரூ.27 லட்சம் வரை மருத்துவ உதவியை பெற முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2992 சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை அரசு ஊழியர்கள் பெற முடியும்.

இதற்காக 1535 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது, மேலும் குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு பிரீமியத்தை அரசே செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.