கிர்​கிஸ்​தானில் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்ஈரான் அதிபர் மசூத் பிரதமர் மோடி சந்திப்பு- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சு

 

கிர்​கிஸ்​தானில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் நேற்று நேரில் சந்​தித்து இருதரப்பு உறவு​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அமெரிக்​கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்​றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்​கிய வர்த்தக கூட்​டாளி​யாக விளங்கும் இந்​தியா போரை நிறுத்​த​வும், அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​சினைக்கு தீர்வு காண​வும் இருதரப்​பை​யும் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதே​நேரத்​தில் இந்​தியா ஈரானுடன் வர்த்​தகம் செய்​வதை கடுமை​யாக எதிர்த்து வரும் அமெரிக்கா இது தொடர்​பாக இந்​திய நிறு​வனங்​கள் மீது பொருளா​தா​ரத் தடைகளை விதித்து வரு​கிறது.

இந்த சூழலில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் நேற்று நேரில் சந்​தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர். கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்​டின் இடையே இந்த சந்​திப்பு நடைபெற்றது. பிப்​ர​வரி​யில் ஈரான்​-அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு இரு​நாட்டு தலை​வர்​களும் நேரில் சந்​தித்​தது இதுவே முதல்​முறை​யாகும்.

இந்த சந்​திப்​பின் போது, இருதரப்பு உறவு​களின் சமீபத்​திய நிலை குறித்து இரு தலை​வர்​களும் ஆய்வு செய்​ததோடு, ஈரானுக்​கும் இந்தி​யா​வுக்​கும் இடையே உள்ள கூட்டு ஒத்​துழைப்பை வலுப்படுத்​து​வது மற்​றும் விரிவுபடுத்த வேண்​டியதன் அவசியத்தை வலி​யுறுத்​தினர். முன்​ன​தாக ஜூன் மாதம், பிரதமர் மோடி​யும் பெசெஷ்கி​யானும் தொலைபேசி​யில் உரை​யாடினர். அப்​போது மோதலை முடிவுக்​குக் கொண்​டுவர எட்​டப்​பட்ட புரிந்துணர்​வு​களை வரவேற்ற பிரதமர் மோடி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்​தன்​மைக்​கான தொடர்ச்​சி​யான முயற்​சிகளின் அவசி​யத்தை வலியுறுத்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் மாநாட்​டின் இடையே ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியனை​யும் பிரதமர் மோடி சந்​தித்​தார். பாது​காப்​பு, பொருளா​தா​ரம், மருந்​து, அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​பம், கலாச்​சா​ரம் மற்​றும் கல்வி உள்​ளிட்ட பல்வேறு துறை​களில் இருதரப்பு ஒத்​துழைப்பை மேலும் வலுப்படுத்​து​வது குறித்து இரு தலை​வர்​களும் விவா​தித்​தனர்.

மேற்கு ஆசி​யா​வின் நிலைமை உள்​ளிட்ட பிராந்​திய மற்​றும் உலகளா​விய முன்​னேற்​றங்​கள் குறித்​தும் அவர்​கள் கருத்துகளைப் பரி​மாறிக் கொண்​டனர். இருதரப்பு உறவு​களை மேலும் ஆழப்​படுத்​த​வும், விரிவுபடுத்​த​வும் ஆர்​மேனி​யா​வுடன் நெருக்​க​மாக பணி​யாற்ற இந்​தியா விரும்​புவ​தாக பிரதமர்​ மோடி தெரிவித்​தார்​.

தொடங்கியது ஷாங்காய் மாநாடு-மோடி, புதின், ஜி ஜின்பிங் பங்கேற்பு

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்றனர்.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உட்பட உறுப்பு நாடு​களின் தலை​வர்​கள் பங்​கேற்று உள்​ளனர்.

மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்​மீனியா பிரதமர் நிகோல் பாஷின்​யான் ஆகியோரைப் பிரதமர் மோடி நேற்று தனித்​தனி​யாக சந்​தித்​துப் பேசி​னார்.

மோடி – புதின் சந்​திப்பு: இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்​றிரவு அவர் சந்​தித்து முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: இந்​தியா – ரஷ்யா இடையி​லான உறவு தனித்​து​வ​மானது, சிறப்​புமிக்​கது. இரு நாடு​களின் நட்​புறவு புதிய உச்​சத்தை எட்​டி​யிருக்​கிறது. உக்​ரைன் போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று இந்​தியா விரும்​பு​கிறது.

ரஷ்​யா​வும் உக்​ரைனும் அமை​திக்​கான முயற்​சிகளைத் தொடங்க வேண்​டும். மனித குலத்​துக்கு புதிய நம்​பிக்​கையை ஏற்​படுத்த வேண்​டும். முடிவில்லாத போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. இந்த விவ​காரத்​தில் உதவ இந்​தியா தயா​ராக உள்​ளது.

செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் இந்​திய தலைநகர் டெல்​லி​யில் பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் புதினுக்​குச் சிறப்பு அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‘‘ரஷ்யா – இந்​தியா இடையி​லான உறவை மேம்​படுத்த பிரதமர் மோடி தனிக்​கவனம் செலுத்தி வரு​கிறார். இதற்​காக அவரை மனதா​ரப் பாராட்​டு​கிறேன்’’ என்றார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 6-வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடியும் அதிபர் புதினும் ஒரே காரில் சென்றனர். தொடக்க விழா மேடைக்கு இருவரும் ஒன்றாக நடந்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எஸ்​சிஓ மாநாட்டில் இன்​று சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கைப் பிரதமர் மோடி​ சந்​தித்​துப்​ பேசு​வார்.