–
ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). இவர் மருந்துக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா.
தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளானபோதும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. .
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அக். மாதம் 15-ம் தேதி பிரியா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரியாவை, கணவர் ராஜேஷ் விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சமீபத்தில் வழக்கு மீதான விசாரணை நிறை வடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அபராதத்தைக் கட்டத் தவறி னால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.



