திபெத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இன்று(26-08-2026) ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களைச் சூறையாடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 95-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 105 இந்தியர்கள் மற்றும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேரைக் காணவில்லை. இவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு பணிகள் தீவிரமான நடைபெற்றுவருகிறது.
நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட குறைந்தது 384 பயணிகள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணிகளில் 105 இந்திய சுற்றுலாப் பயணிகள், 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.இந்திய செய்திகள்
திடீர் வெள்ளத்திற்கான காரணம்
மேலும் உள்ள
போனது 3 பஸ் வெள்ளத்தில் சிக்கியது 2 பஸ்; 20 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய நேபாள டிரைவர்: நடந்தது என்ன? பதற்றத்துடன் விவரிக்கும் ஏஜென்சி உரிமையாளர்’
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவால் மிகவும் சிறந்த முதல்வர்கள்: கரப்பான்பூச்சி கட்சி தலைவர் தீப்கே பாராட்டு’
தமிழகத்தில் தாறுமாறாக எகிறிய அத்தியாவசிய பொருட்களின் விலை காய்கறி, அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி கண்டுகொள்ளாத அரசு’
பரந்தூர் விமானநிலையத்துக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு மீண்டும் தர வேண்டும்: தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ. போர்க்கொடி’
திருத்தணி முருகன் கோயிலில் நாளை மதியம் முதல் மாலை வரை தரிசனம் ரத்து’
இமயமலையில் இருந்து பனிப்பாறைகள் உருகி நேபாளம் – சீனா இடையிலான ரசுவாகதி எல்லையின் வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ள லெண்டே ஆற்றில் விழுந்தது. இதன் காரணமாகவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
சேதம்
நேபாளம் வெள்ளத்தில் 19 பாலங்கள், 40.கி.மீ தூரத்திற்கு சாலைகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 13 மின் திட்டங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.
உ.பி., பீகாரில் முன்னெச்சரிக்கை
நேபாளம் கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தை அடுத்து உ.பி., பீகாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பீகாரை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பீகாரின் வால்மீகி நகரை தாக்கும் என அஞ்சப்படுகிறது.



