கினியா நாட்டின் தலைநகர் கொனாக்ரியின் பெஸ்ஸியா பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் அதிகாலை 2 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, அங்கு மலைபோல் குவிந்திருந்த குப்பை சரிந்து அருகில் இருந்த கூடாரங்கள் மற்றும் வீடுகளின் மீது விழுந்தது.
இந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தும், 16 பேர் லேசான காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் 1.51 கோடி மக்களில் 37 லட்சம் பேர் மிகக் குறைந்த வருமானத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே, மழைக்காலத்தில் இந்த குப்பை கிடங்கால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால், இதனைக் மூடிவிட்டு குப்பைகளை நகருக்கு வெளியே மாற்றுவதாக கினியாவின் பிரதேச நிர்வாக அமைச்சர் ஜெனாப் டூரே தெரிவித்துள்ளது.



