வங்​கஇந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வங்​கதேசத்​தில் கொலை

 

வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்​தம்​ப​தி​யின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரி​யம் (12). கடந்த சில நாட்​களாக அவரது வீடு வெளிப்​புற​மாக பூட்​டப்​பட்டு இருந்​தது. உறவினர்​கள் மொபைல்​போனில் தொடர்பு கொள்ள முயன்​றனர். ஆனால் அனை​வரின் மொபைல் போன்​களும் அணைக்​கப்​பட்டு இருந்​தன.

இதுகுறித்து உள்​ளூர் மக்​கள், உறவினர்​கள் போலீ​ஸில் புகார் அளித்​தனர். இதன்​பேரில் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு கணப​தி​யின் வீட்​டுக்கு சென்​றனர். வெளிப்​புற பூட்டை உடைத்து வீட்​டுக்​குள் நுழைந்​தனர். அங்கு தூக்​கில் தொங்​கிய நிலை​யில் கணப​தி​யின் உடல் மீட்​கப்​பட்​டது. மற்ற மூவரும் ஆங்காங்கே சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து ரங்க்​பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்​துல் மபூத் கூறிய​தாவது: கடந்த வியாழக்​கிழமை இரவு கணபதி சக்​கர​வர்த்​தி​யின் வீட்டு மாடிக்கு முக்தோ மற்​றும் சித்​தார்த்தா ஆகியோர் சென்று உள்​ளனர். இரு இளைஞர்​களும் சேர்ந்து மாடி​யில் போதைப் பொருளை உட்​கொண்டு ஆடல், பாடலில் ஈடு​பட்டு உள்​ளனர். மொட்டை மாடி​யில் யாரோ நடமாடு​வதை உணர்ந்த கணபதி தனி​யாக மாடிக்​குச் சென்​றுள்​ளார். அங்கு இரு​வர் போதை​யில் மிதப்​பதை பார்த்து அவர்​களை கடுமை​யாக கண்டித்து உள்​ளார்.

இதனால் ஆத்​திரமடைந்த முக்​தோ​வும், சித்​தார்த்​தா​வும் ஒரு துண்டால் கணப​தி​யின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். கணவரின் அலறல் கேட்டு மனைவி பிரீத்தி லதா மொட்டை மாடிக்​குச் சென்​றுள்​ளார்.

இரு இளைஞர்​களும் சேர்ந்​து, அவரை​யும் துண்​டால் கழுத்தை இறுக்கி கொலை செய்​துள்​ளனர். பின்​னர் கணப​தி​யின் மகள், மகனை​யும் இதே பாணி​யில் கொலை செய்​து​விட்டு அங்​கிருந்து தப்​பியோடி​விட்​டனர். தீவிர விசாரணைக்குப் பிறகு இருவரையும் கைது செய்துள்ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.