மேஷ ராசி அன்பர்களே! எண்ணிய செயல்கள் நடக்கும் நாள். பெரிய மனிதர்களின் ஆதரவு நன்மையை தரும். தொழில்துறையில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பொருளாதாரம் வரவு அதிகரிக்கும். வேலை இடத்தில் உயர்வு கிடைக்கும். உங்களின் பணிக்கு பாராட்டு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு சிறந்த வகையில் கிடைக்கும். கிழக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: தொழில்நுட்பத்தோடு வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவது. எதைச் செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக சிந்திப்பது. இன்று உங்கள் பலவீனம்: உறவினர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்வது. வேலை இடத்தில் சில சிரமங்கள் ஏற்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக தேவை. 2 வேலை இடத்தில் கவனம் சிதற கூடாது. 3 கொடுக்கல் வாங்கலில் நிதானமாக நடக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நல்ல காரியம் நடக்கும் நாள். வேலை இடத்தில் உங்களின் வேலை திறன் பாராட்டப்படும். மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகி மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் வந்து சேரும். பணவரவு அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புண்ணிய தளங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆபரண யோகம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டிலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். நண்பரின் ஒத்துழைப்பு பலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: திடீரென மனச் சோர்வு ஏற்பட்டு சங்கடப்படுத்தும். வேலை இடத்தில் எதிர்ப்புகள் உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்கு அலட்சியம் வேண்டாம். 2 வெளியூர் செல்லும்போது பணம் நகைகள் பத்திரம். 3 அனாவசிய செலவுகள் பாதிப்பை கொண்டு வரும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாள். வேலை இடத்தில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய மாற்றம் உருவாகும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும். வேலை இடத்தில் திறமை பாராட்டப்படும். வெளியூர் பயணங்களில் லாபம் கிடைக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: மன உறுதியோடு தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்திற்கு ஏற்படும் எதிர்ப்புகளை களைவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: மற்றவர் பேச்சை அப்படியே நம்புவீர்கள். சில நேரங்களில் அநாவசியமாக கோவப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நிறுத்தும் இடத்தில் வாகனங்களை பூட்ட மறக்க வேண்டாம். 2 வாகனங்களில் செல்லும்போது தொலைபேசி வேண்டாம். 3 வேலை இடத்தில் வம்பு பேச்சில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! நன்மை தீமை கலந்து நடக்கும் நாள். வேலை இடத்தில் பொறாமையால் சிக்கல் உண்டாகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதை கவனமாக களைய வேண்டும். வியாபாரம் சற்று மந்தமாக நடக்கும். கையிருப்பு கரையலாம். தேவையில்லாத செலவுகள் வரும். குடும்பத்தில் குழப்பமான நிலை காணப்படும். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மந்தமான பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியம் தாமதமாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் மட்டுப்படும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்திற்கு தேவையான பண பலத்தை பெருக்குவீர்கள். நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சொல் பொறுக்க மாட்டாமல் மனம் சோர்வடைவீர்கள். வேலை இடத்தில் உங்கள் திறமை மறைக்கப்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகங்களில் ஈடுபட வேண்டாம். 2 கிடைக்கிறதே என்று கடன் வாங்க வேண்டாம். 3 அந்நிய பெண்களிடம் நெருக்கம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! அதிரடியான காரியங்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் சிறப்பு சேரும். பதவி உயர்வு, பணி மாறுதல் உண்டாகும். சம்பள அதிகரிப்பு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் வந்து சேரும். தொழிலில் விரிவாக முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குறை கூறுபவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் உண்டாகும்.
இன்று உங்கள் பலம்:
புதிய தொழில்நுட்பத்தோடு வியாபாரத்தை பெருக்குவீர்கள். பணத்தை சேமிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
சின்ன சின்ன பிரச்சனைகளால் மனக்குழப்பும் அடைவீர்கள். வேலை இடத்தில் குழப்பம் உண்டாகும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 தவணைப்பணம் சரியான நேரத்தில் கட்ட வேண்டும்.
2 வரவு செலவு கணக்கு முறையாக பராமரிக்க வேண்டும்.
3 செலவுகளை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்ட வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 1,6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! மறைமுக எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் சில சிக்கல்கள் உண்டாகலாம். தொழில்துறைகளில் எதிர்ப்பு உருவாகி மறையும். வேலை இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிர்வாகத்தை பற்றி யாரிடமும் பேசுவது நல்லது அல்ல. வேலை உயர்வு சம்பள உயர்வு தள்ளிப் போகலாம். பண வரவு சற்று மந்தமாக இருக்கும். தேவையில்லாத கடன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. குலதெய்வத்தினுடைய அருளால் நல்லது நடக்கும்
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிதமான பலன் பெறுவார்கள்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
நிலைமையை புரிந்து கொண்டு நடப்பீர்கள் நண்பரின் ஆதரவு பக்க பலமாக இருக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
அரசு வேலை தாமதமாக நடக்கும். உறவினர்கள் தொந்தரவு கொடுப்பார்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பங்கு பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும்.
2 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்க வேண்டாம்.
3 வங்கி வரவு செலவுகளில் அலட்சியம் வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்: 1,9
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! மங்கல காரியங்கள் நடக்கும் நாள். மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். உறவினர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். அனுசரித்துப் போவது நல்லது கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு அதிரடி வாய்ப்புகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி தன தானிய சேர்க்கை வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் ஆடை ஆபரண யோகம் கிடைக்கும் . இன்று உங்கள் பலம்: சரியாக திட்டமிட்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களுக்கு உதவு நண்பர் தயாராக இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வது நல்லது. உடனே உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் வாங்கி கடன் கொடுப்பது நல்லதல்ல 2 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. 3 எழுதி வாங்காமல் பெரிய தொகை கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! சுப காரியங்கள் நடக்கும் நாள். வேலை இடத்தில் சாமர்த்தியத்தை வெளிப்படுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு மன நிம்மதி அளிக்கும். பணியிடம் மாற்றம் தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். அரசு காரியத்தில் உள்ள தடைகள் அகலும். வியாபாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். மனநிலையில் புதிய இலக்குகள் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கையில் காசு புரளும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு யோகமான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் தன லாபம் கிட்டும். இன்று உங்கள் பலம்: புதிய சிந்தனை மூலம் வியாபாரத்தை மாற்ற திட்டமிடுவீர்கள். அரசியல்வாதி ஆதரவு பலம் சேர்க்கும். இன்று உங்கள் பலவீனம்: குடும்பப் பிரச்சனை மன நிம்மதியை குறைக்கும். பிள்ளைகளின் போக்கு சங்கடம் தரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகத்தை நாட வேண்டாம். 2 தொலைபேசி ஆசி வார்த்தைகளை நம்ப வேண்டாம். 3 பங்கு பரிவர்த்தனையில் அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! உயர்வு தாழ்வான பலனை தரும் நாள். தொழில் புதிய முதலீடுகள் நிதானமாக செய்ய வேண்டும். வியாபாரத்தில் சற்று இறக்கமான நிலை காணப்படும். வேலை இடத்தில் சக ஊழியர் விஷயத்தில் தலையிடக்கூடாது. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வரவுகளை அதிகரிக்க வழி காண வேண்டும். அலுவலகத்தில் நிதானத்தை கைவிடக்கூடாது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். குல தெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு மிதமான பலன் உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்தது தாமதமாக நடக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செலவுகள் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: சமூகப் பணிகளின் மூலம் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலவீனம்: கடன் சார்ந்த பிரச்சினைகளால் மன வேதனை உண்டாகும். உடன் இருப்பவர்கள் செயல்பாடுகள் இடையூறு ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மிதமான வேகத்தில் வாகனம் ஓட்ட வேண்டும். 2 வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 எதிர் பாலின உறவுகளில் கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும் நாள். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவு பெறும். உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பொருள் வரவு அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் புதிய மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களின் தேவை அதிகரிக்கும். வழிபட்டார செல்வாக்கு உயரும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பணி மாறுதல் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று உங்கள் பலம்: உடன்பிறப்புகள் ஆதரவு பலமாக அமையும். சேமிப்பு சார்ந்த விஷயங்களால் மன தைரியம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலவீனம்: செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத பயண தடை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேகத்தை விட விவேகமாக செயல்படுவது நல்லது. 2 மாலை நேரத்தில் மனதை அலைபாய விட வேண்டாம். 3 புதிய நண்பர்களிடம் நெருக்கத்தை குறைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும் நாள். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். தொழில்துறைகளில் இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரவிலிருந்த தடைகள் நீங்கும். வேலை இடத்தில் காணப்பட்ட சிக்கல்கள் மறையும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சுப காரியங்களில் உள்ள எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாறுபட்ட சிந்தனைகள் தொழிலில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். அலுவலகப் பிரச்சினைகள் குறையும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு கேட்டது கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கிடைத்தது நிலைக்கும். இன்று உங்கள் பலம்: முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் நண்பர்களின் உதவி மாற்றத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் பலவீனம்: அவசரப்பட்டு வார்த்தைகளை வீசி விடுவீர்கள் எதையும் சுலபமாக நம்பி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மற்றவர்கள் நம்பி வாக்குறுதி அளிக்க வேண்டாம். 2 புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். 3 மனக்குழப்பத்தோடு வேலை செய்யக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.
மீன ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன்கள் நடக்கும் நாள். தொழிலில் நிதானமான போக்கு தேவை. சாதாரணமான வேலை கூட கடினமாக தெரியும். அரசு வழியில் உதவிகள் தாமதமாகும். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சில எதிர்ப்புகள் ஏற்படலாம். புதிய முதலீடுகள் செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். வேலை இடத்தில் வம்பு வழக்குகளில் சிக்க கூடாது. அலைச்சல் அதிகமாகி உடல் சோர்வு உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மனச் சுமை அதிகரிக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் சற்று குறையும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் கேட்ட உதவிகள் தாமதமாகும். இன்று உங்கள் பலம்: புதிய தொழில் நிமித்தமான சிந்தனைகள் கூடும். முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: நண்பர்களின் ஆலோசனையால் மனக்குழப்பம் ஏற்படும். அரசு வழியில் காரியதாமதம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வருமானத்தை சேமிப்பாக மாற்ற வேண்டும். 2 எல்லாவற்றையும் எளிதில் நம்பி விடக்கூடாது. 3 வரவு செலவு கணக்கில் அலட்சியம் காட்ட வேண்டாம்.. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 3 – ஐப்பசி – பராபவ வருடம் செவ்வாய் நாள் செவ்வாய் திதி நவமி (up to 12:50 pm) தசமி (up to October 21, 2:12 pm) நட்சத்திரம் திருவோணம் (up to 6:02 pm) அவிட்டம் (up to October 21,7:47 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 1:45 – 2:45 am / 7:30 – 8:30 pm இராகு காலம் மதியம் 3.00 – 4.30 எமகண்டம் காலை 9.00 – 10.30 குளிகை மதியம் 12.00 – 1.30 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் சூரியோதயம் 6:03 AM சூரிய அஸ்தமனம் 5:43 PM சந்திரோதயம் Oct 20 1:43 PM சந்திர அஸ்தமனம் Oct 21 1:33 AM



