குரு–சனி அமைப்பால் சில நவபஞ்சம யோகம் வாழ்க்கையில் சவால்கள் ஏற்படலாம்

 

சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அதே சமயம் மீன ராசி அதிபதி ஆன குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்ற சஞ்சாரம் செய்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் நவபஞ்ச ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். அவற்றிற்கான எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

நவபஞ்சம யோகம் 2026ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு கர்ம பலன்களை தரக்கூடியவர் சனிபகவான். இவர் தற்பொழுது மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அதே சமயம் மீன ராசியின் அதிபதியான குரு பகவான், கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த காலத்தில், சனியுடன் நவ பஞ்சம யோகத்தை ஏற்படுத்துகிறார். பொதுவாக யோகங்கள் நல்ல பலன்களை தரும் என்றாலும், சில யோகங்கள் சாதகமற்ற பலன்களையும் தரக்கூடியதாக இருக்கும்.

மேஷ ராசி சேர்ந்த அவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்வதும், குரு உங்களுடைய சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதன் காரணமாக உங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதங்கள் ஏற்படும். உங்களுடைய வருமானம் சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதைவிட அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்களுடைய செலவுகளை பட்ஜெட் போட்டு செயல்படுவது அவசியம்.

 

முக்கியமான முடிவுகள் எடுப்பது, முதலீடுகள் செய்யும் போது போன்ற விஷயங்களில் நிதானமாக இருப்பதோடு, ஆலோசனை பெற்ற செயல்படுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும். அதே சமயம் யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக நம்புவது உங்களுக்கு பாதிப்பை தர வாய்ப்புகள் உண்டு.

கடக ராசி நண்பர்களுக்கு உங்களுடைய ராசியில் குரு உச்சம் பெற்ற சஞ்சாரம் செய்து வருகின்றார். அவருக்கு ஒன்பதாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதன் காரணமாக, உங்களுடைய வேலை தொடர்பான விஷயங்களை சிரமங்களை சந்திப்பதோடு, நினைத்த இலக்கை அடைய கூடுதல் உழைப்பு தேவைப்படும்.மேலும் பணியிடத்தில் அனைவரிடமும் அனுசரித்து செல்லவும்.

எந்தவித மோதலையும் தவிர்க்கவும். உங்களுடைய மேல் அதிகாரிகளுடன் உறவு மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக உணர்வீர்கள். உங்களுடைய உடல்நலம் தொடர்பாக ஏற்று இறக்கங்களை சந்திக்க நேரிடும். மேலும் எந்தவித பண பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை.

விருச்சிக ராசி என் நண்பர்களுக்கு இந்த காலம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு குருவின் அருள் கிடைத்தாலும், சனி பகவான் புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த காலத்தில் எந்தவித வம்பு வழக்குகளிலும் ஈடுபட வேண்டாம். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பெரிய நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உங்களுடைய குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யவும். உங்களிடம் வாழ்க்கையில் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால், அவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளவும்.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு பின்னர், நவகிரகங்களில் சனி பகவானை வழிபாடு செய்யவும்.
சனிக்கிழமை அன்று இரும்பு, கருப்பு நிற ஆடைகள், குடை, காலணிகளை தேவைப்படுபவருக்கு தானமாக வழங்கவும்.சனி பகவான் சன்னதியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.

மேலும் சனி பகவானின் கடின பலன்களை குறைக்கும் விதத்தில் அருகில் உள்ள அனுமன் கோவில் வழிபாடு செய்வதும், தினமும் விநாயகரை வழிபாட்டு செல்வது அவசியம்.
முடிந்த வரை தினமும் காலை சிவன் கோவிலுக்கு செல்வதும் சிவ மந்திரங்களை ஜெபிப்பதும் அற்புத பலன்களை தரும்.

அக்டோபர் 31ஆம் தேதி தேதி, குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அதுவரை இந்த காலத்தில் குரு மற்றும் சனியின் நவபஞ்சம அமைப்பு காரணமாக சில ராசியினர் பணம் சார்ந்த விஷயங்களில் கொடுத்து கவனத்துடன் இருக்க வேண்டும். தாங்கள் செய்யக்கூடிய தொழில், வேலையில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வீர்கள். அது மட்டும் இல்லாமல் சனி நட்சத்திர மாற்றங்கள் காரணமாக சில ராசிகளுக்கு சிக்கல்கள் அதிகரிக்கும். என்னென்ன ராசிகள் பாதிக்கப்படும், அவர்களுக்கான தீர்வுகளையும் தெரிந்து கொள்வோம்.

தகவல்கள் முற்றிலும் உண்மையானவை நாங்கள் கூறவில்லை.