மேஷ ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வாகன லாபம் உண்டாகும். ஆடை ஆபரணங்களும் புகழும் சேரும். குடும்பத்தில் பொன் வெள்ளி நகைகள் வாங்க வாய்ப்பு ஏற்படும் .அரசு துறையில் உயர்ந்த பதவி கிடைக்கும். உங்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். நிம்மதியாக உறக்கம் பெறுவீர்கள். பல வகையிலும் செல்வச் செழிப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் வெளிப்படும். பகைவர் தொல்லைகள் விலகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க நண்பர்கள் கிடைப்பர். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முயற்சியில் வெற்றி பெறுவர். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் லாபம் அடைவர். இன்று உங்கள் பலம்: சகோதரன் அன்பு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உறவினர்கள் பிரியமுடன் நடந்து கொள்வார்கள். இன்று உங்கள் பலவீனம்: எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்க சற்று தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. எந்தச் செலவாக இருந்தாலும் யோசித்து செய்ய வேண்டும். 2. வேலை செய்யும் இடங்களில் அளவோடு பேச வேண்டும். 3. ஆசை காட்டும் தொலைபேசி அழைப்புகளை துண்டித்து விட வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இன்று வேலைகளை விருப்பமுடன் செய்வீர்கள். தொழிலில் உயர்ந்த லாபம் கிடைக்கும். தெய்வ பலம் அதிகரிக்கும். வேலையில் உயர்ந்த பொறுப்பு வந்து சேரும். சுகபோகமும் சயன சுகமும் ஏற்படும். ஆடை ஆபரண லாபம் கூடும். சகல சௌபாக்கியங்கள் ஏற்படும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சிவபெருமானின் அனுக்கிரகத்தால் சுப நிகழ்ச்சிகள் கை கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியமாக வேலை செய்வார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிலை மேம்படுத்துவார்கள். மிருகசீரிடம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடை ஆபரணம் வாங்குவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு செயல்பட்டு காரியத்தை நடத்துவீர்கள். எதிர்ப்புகளை புதிய முறையில் சந்தித்து வெற்றி பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: நண்பர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க மனம் வராது. வெளியில் செல்லும்போது முக்கிய பொருளை மறந்து விட்டு செல்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசாங்க வேலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 2 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 தொழிலில் அதிகரிக்கும் வருமானத்தை சிதற விடக்கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! இந்த நாள் இனிப்பான செய்தி ஒன்றைக் கொண்டு வரும். பெண்களால் அதிக நன்மைகள் ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார லாபங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி சுகபோகம் உண்டாகும். உல்லாச கேளிக்கைகளில் மனம் நாட்டம் கொள்ளும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொலைந்த பொருள் மீண்டும் கைக்கு வந்து சேரும். புத்தி கூர்மை அதிகரிக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் நன்மை ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய திட்டங்கள் போடுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பாக வேலை செய்வார்கள். இன்று உங்கள் பலம்: நினைத்தது அடுத்தடுத்து நிறைவேறும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம்
அதிகரித்து கையிருப்பு கூடும். இன்று உங்கள் பலவீனம்: மனைவி செய்யும் செலவுகளை தட்டி கேட்க இயலாமல் தவிப்பது. குழந்தைகளின் குறும்புத்தனத்தை சகித்துக் கொண்டிருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் முறையாக எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும். 2 தேவையில்லாத விஷயங்களில் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். 3 இரவு நேரத்தில் தூக்கம் கெட்டால் அடுத்த நாள் வேலை கெடும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! இன்று நல்ல பலனை அடையும் நாள். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். மங்கல முயற்சி நிறைவேறும். மக்கள் பேறு வாய்க்கும். தைரியத்தாலும் துணிவாலும் தொழிலிலும் வியாபாரத்திலும் மேன்மை கிட்டும். அலைச்சல் அதிகமானாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். மன சஞ்சலம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எண்ணியது நடக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டு நண்பரின் அன்பும் ஒத்துழைப்பும் உங்களுக்கு பலம் சேர்க்கும். எந்த நேரத்திலும் பணம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: சட்டென்று கோபம் வந்துவிடும். உடனே வேலையை முடிக்க வேண்டும் என்று சிந்தனை இருக்காது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த விஷயத்திலும் தாமதத்தை தவிர்க்க வேண்டும். 2 சொந்தக்காரர்கள் மூலமாக செலவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 3 தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரம் பெருமான்.
சிம்ம ராசி அன்பர்களே! கசப்பான செய்தி இனிப்பாக மாறும் நாள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் ஆடை ஆபரண ஆதாயங்கள் அமையும். அரசு அதிகாரிகளினால் அனுகூலம் உண்டாகும். மனக்கவலைகள் மறைந்து போகும். விஷப் பிராணிகளால் இருந்த பாதிப்பு தீரும். தனதானியங்கள் உற்பத்தி பெருகும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுகபோகம் நிலைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். பூரம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் காரியத்தை முடிப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: குலதெய்வத்தின் பரிபூரணமான அருள் உங்களுக்கு சித்திக்கும். எந்த காரியமாக இருந்தாலும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டு. இன்று உங்கள் பலவீனம்: உணர்ச்சிவசப்பட்டு செய்யும் காரியங்களால் பாதிப்பு ஏற்படும். பொறுமையின்மை, நிதானமின்மை உங்களை சிரமப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தில் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனை. 2 மனைவியிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. 3 குழந்தைகளிடம் பாசத்தோடு நடந்து கொள்ள தவற கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! இந்த நாளில் நினைத்த காரியம் நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புதிய தெம்பு உண்டாகும். புத்துணர்ச்சி ஏற்படும். எடுத்த முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். அந்நியரால் சகாயம் ஏற்படும். அறிவாளிகள் ஆதரவு தொழிலுக்கு பயன்படும். தன லாபங்கள் அதிகரிக்கும். தெய்வ பக்தியால் குடும்பத்திற்கு நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி உயரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திறமைகளை
வெளிப்படுத்துவர் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனபலம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனலாபம் கூடும். இன்று உங்கள் பலம்: காரிய வெற்றிக்காக நீங்கள் திட்டம் போட்டு செயல்படுவீர்கள். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: நண்பர்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்று
நம்பிக்கை வைப்பது. பழைய சம்பவத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். 2 பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். 3 நண்பர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இல்லாமல் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! வேலை இடத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். உங்களின் திறமைக்கேற்ப ஊதிய உயர்வும் பதவி மாற்றமும் ஏற்படும். நீங்கள் நினைக்கின்ற காரியத்தை செய்து முடிக்கின்ற வழி அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரம் அதிகரித்து கையில் பணம் தாராளமாக புரளும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் மேம்படும். உத்தியோக உயர்வு உண்டாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு தாமத வெற்றி கிடைக்கும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வியாபாரம் மேம்படும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் பெருகும். இன்று உங்கள் பலம்: உடனுக்குடன் எந்த வேலையையும் முடிப்பேன் என்று உற்சாகமாக செயல்படுவது. வேலை இடத்தில் உங்கள் திறமையை தனித்துவமாக வெளிப்படுத்துவது. இன்று உங்கள் பலவீனம்:
தன்னால்தான் இந்த வேலையை செய்ய முடியும் என்று நினைப்பது. தானாகவே மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியூர் பயணத்தின் போது பணம் காசு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 2 புதிதாக அறிமுகமானவரிடம் நெருக்கம் காட்டக்கூடாது. 3 வேலை இடத்தில் கவனமாக அக்கறையாக பணி செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள் இது. பூமி லாபம் கிட்டும். அரசாங்க அதிகாரிகள் உதவியை செய்வார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். பலவகையில் அனுகூலம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வாகன லாபம் உண்டாகும். சுபயோக சம்பவங்கள் நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை அதிகரிக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பதவியில் உயர்வு பெறுவார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் மன நிம்மதி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: அரசாங்க அதிகாரிகள் செல்வந்தர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பது. திட்டமிட்டு காரியம் செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி தாமதமாக கிடைக்கும். வேலை இடத்தில் உங்களுக்கு எதிராக சிலர் நடந்து
கொள்வார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அந்நிய பெண்களிடம் நெருக்கம் காட்டாமல் பழக வேண்டும். 2 உறவினர்களின் வீட்டு விஷயங்களில் கொஞ்சம் தள்ளி இருக்க வேண்டும். 3 மனைவி சொன்ன பொருளை தவறாமல் வாங்கி வர வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம். வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி.
தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு யோகமான சம்பவங்கள் நடக்கும் நாள். திருமண வாய்ப்பு கைகூடும். மழலை செல்வம் சித்திக்கும். வியாபாரத்தில் மிகவும் லாபம் கிடைக்கும். தொழில்துறையில் அதிக வருமானம் கிட்டும். குடும்பத்தில் சௌகரியம் அதிகரிக்கும். தனவரவால் கையிருப்பு கூடும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு பக்க துணையாக இருக்கும். பயிர் தொழிலில் லாபம் கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் சித்திக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மன நிம்மதி அடைவார்கள். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து
பண உதவி வந்து சேரும். அவசியமான செலவுகளுக்கு கையிருப்பு உதவியாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: சரியான நேரத்தில் சாப்பிட முடியாத அளவுக்கு வேலையில் அலைச்சல் இருக்கும். மற்றவர் குறை சொல்வதை பொறுத்துக் கொள்ளாத நிலையில் இருப்பீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பண வரவு செலவுகளை பக்குவமாக கையாள வேண்டும். 2 நெருங்கிய உறவினராக இருந்தாலும் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. 3 வாகனங்களை ஓட்டும்போது செல்போன் கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
மகர ராசி அன்பர்களே! விரும்பிய சம்பவங்கள் நடக்கும் நாள் இன்று. வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உதவி செய்கின்ற மனநிலை உங்களுக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைத்து பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூரிலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெற்றியடைவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள். இன்று உங்கள் பலம்: துறுதுறுப்பாக இருக்கின்ற உங்கள் வேலை திறன் தொழிலை
மேம்படுத்தும். தீர்க்கதரிசனமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: இல்லை என்று சொல்லாமல் கையில் இருக்கின்ற காசை கேட்போரிடம் கொடுப்பீர்கள். யார் சொல்வதையும் எளிதாக நம்புவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நாளை பார்த்துக் கொள்வோம் என்று வேலையை தள்ளிப் போடக்கூடாது. 2 வேலை இடத்தில் மேலதிகாரி பற்றி மற்றவரிடம் பேசக்கூடாது. 3 பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் மங்கல முயற்சிகள் வெற்றி பெறும். தர்ம காரியங்கள் நடக்கும். மகான்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அலைந்து திரிய வேண்டிய வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக பல காரியங்களை சாதிப்பீர்கள். தனதானிய லாபம் கிட்டும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இன்று உங்கள் பலம்: அரசாங்க காரியங்களுக்கு நல்ல நண்பர்கள் உதவியாக
இருப்பார்கள். வியாபாரம் வெற்றிக்காக திட்டம் தீட்டுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வீட்டு சிந்தனையால் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். குறித்த நேரத்தில் வேலை முடியாமல் தடுமாறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும். 2 வாகனம் ஓட்டும்போது கவனம் சிதறக்கூடாது. 3 இணைய மோசடியில் விலகி இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! தேடிய நன்மைகள் வீடு வருகின்ற நாள் இது. வியாபாரத்தில் மிகப்பெரிய லாபமடைவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். கிழக்கு திசை பயணத்தால் ஒரு பெரிய நன்மை உண்டாகும். வியாபாரத்தில் நினைத்துப் பார்க்காத லாபம் கிட்டும். தொழில்துறையில் எதிர்ப்புகள் விலகும். உங்களைக் கெடுக்க நினைத்தவர்கள் கெட்டுப் போவது நிச்சயம். பெண்களால் ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் சித்திக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மேன்மை அடைவார். இன்று உங்கள் பலம்: சாமர்த்தியமான பேச்சால் மற்றவருடைய மனதில் இடம் பிடித்து
விடுவீர்கள். வேலை இடத்து குறைகளை நுணுக்கமாகக் கண்டுபிடிப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: எந்த காரியத்திலும் சடாரென கோபப்பட்டு விடுவீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை பேசி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 உரிமை இல்லாத இடத்தில் உறவு நெருக்கம் வேண்டாம். 2 நிலம் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 3 நீண்ட தூர பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 18 – புரட்டாசி – பராபவ வருடம் திங்கள் நாள் திங்கள் திதி தசமி (up to October 06, 2:08 am) ஏகாதசி (up to October 07, 12:35 am) நட்சத்திரம் புனர்பூசம் (up to 12:13 am) பூசம் (up to 11:09 pm) ஆயில்யம் (up to October 06,10:17 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 6:00 – 7:00 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 9:15 – 10:15 am / 7:30 – 8:30 pm இராகு காலம் காலை 7.30 – 9.00 எமகண்டம் காலை 10.30 – 12.00 குளிகை மதியம் 1.30 – 3.00 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் மூலம், பூராடம் சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:52 PM சந்திரோதயம் Oct 05 12:55 AM சந்திர அஸ்தமனம் Oct 05 2:06 PM



