UAE-ஈரானுடனான பரிவர்த்தனைகள் முழுமையாக நிறுத்தம்.! தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

 

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஈரானுடனான அனைத்து வர்த்தக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் உடனடியாகவும், மறு உத்தரவு வரும் வரையிலும் நிறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக அமீரக வெளியுறவு அமைச்சகம் மேற்கண்ட அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளை நோக்கி ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு அதிநவீன ஏவுகணைகளை அமீரக பாதுகாப்புப் படை கண்டறிந்ததை அடுத்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரான், அமீரகத்தின் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தியது.

அமீரகத்தின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில், கடல்சார் போக்குவரத்தை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமீரகம் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் அமீரகத்தை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால் ஈரானின் விளக்கத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லாத UAE, அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

அமீரகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் இறக்குமதி செய்யும் பொருட்களில் சுமார் 30% அமீரகத்தின் வழியாகவே செல்கிறது. மேலும், ஈரானுக்கான முதன்மை நிதிச் சந்தையாகவும் அமீரகம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சவுதி கடல்பகுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூட்டில் மேலும் தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

சவுதி கடல்பகுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் தமிழ்நாடு மீனவர் உயிரிழந்தார். ஏற்கனவே சீர்காழி மீனவர் மாவீரன் உயிரிழந்த நிலையில் சங்கர் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.