தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது-30 தொழிலாளர்கள் பலி

மத்திய ஆபிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் சுரங்கப் பணியாளர்கள் 30 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நானா மாம்பேரே மாகாணத்தில் உள்ள அப்பா பிராந்தியத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தினுள் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி ஸ்தலத்திலேயே 30 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற முறையில் தொழில்நுட்ப வசதிகளை சரிவர பயன்படுத்தாமல் தங்கம் வெட்டியெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டமையே விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.