பெண்களுடன் டேட்டிங் சென்ற முதியவர்.1.30 லட்ச ரூபா திருட்டு

.

இந்தியா டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் முதியவர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் இரண்டு இளம் பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தெற்கு டெல்லியில் உள்ள டிபன்ஸ் காலனி பகுதியில் நடந்துள்ளது. ஜோத்ஸ்னா மற்றும் மான்சி என்ற இரு பெண்கள் போலி அடையாளத்துடன் டேட்டிங் செயலியில் கணக்கு தொடங்கி, 67 வயது முதியவரை இரவு உணவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவரது செல்போனை திருடி, யுபிஐ மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.30 லட்ச ரூபாயை ஆன்லைன் மூலமாக திருடியுள்ளனர்.

வங்கி பரிவர்த்தனை தடயங்கள், கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று டேட்டிங் செயலிகள் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.