உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய பெண்!

 

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த ரேணு தரியல், உயிருடன் இருக்கும் பெண்களில் உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்டவர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

ரேணுவின் தலைமுடி உத்தியோகபூர்வமாக 271.50 சென்றிமீற்றர், அதாவது சுமார் 8 அடி 10 அங்குலம் நீளமாக அளவிடப்பட்டுள்ளது.

இதற்காக அவரது பெயர் ‘கின்னஸ் உலக சாதனை’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தனித்துவமான உலக சாதனையில் இதற்கு முன், உக்ரேனைச் சேர்ந்த அலியா நசிரோவா இடம்பிடித்திருந்தார்.

இவரது தலைமுடியின் நீளம் 8 அடி 5.3 அங்குலம் (257.33 செமீ) ஆகும். இந்நிலையில், அலியாவின் சாதனையை தற்போது ரேணு தரியால் முறியடித்துள்ளார்.