மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானிய ராணுவம் அமெரிக்க வீரர்களை குறிவைத்து அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க ராணுவ வீரர்களை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ 30,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஈரானிய ராணுவ தளபதி அமீர் ஹடாமி அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களில் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு இந்த வெகுமதி இரண்டு மடங்காக அதாவது 60,000 டாலர்களாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்க வீரரை கொல்ல பயன்படுத்தப்படும் ஆயுதம் இரட்டிப்பு விலைக்கு வாங்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபருக்கு புதிய ஆயுதமும் பரிசாக வழங்கப்படும் என்றும், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 முதல் தொடங்கிய இந்த மோதலில் ஏற்கனவே 17 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஜூன் 17-ல் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் பலவீனமாகவே உள்ளது. தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



