மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 26-செப். 2026

 

மேஷ ராசி அன்பர்களே! வெற்றிகரமாக காரியங்கள் நடக்கும் நாள். தொழில்துறைகளில் வருமானம் அதிகரிக்கும் மனநிறைவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். பணவரவு அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் தேவை அலுவலகத்தில் முக்கியமாக கருதப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். தேக ஆரோக்கியம் கூடும். சிறப்பான பலன்கள் கைக்கு வந்து சேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மையான பலன் அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: அரசியல்வாதியின் நெருக்கம் பக்க பலமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தொழில் உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: உடன்பிறப்புகளால் செலவு அதிகரிக்கும். வேலை சம்பந்தப்பட்ட அலைச்சல் அதிகமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 2 அடுத்தவரின் ஆலோசனையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். 3 அவசரப்பட்டு வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

 

ரிஷப ராசி அன்பர்களே! சற்று சுணக்கமான பலன் வந்து சேரும் நாள். வேலை இடத்தில் முனைப்போடு இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் சர்ச்சைகள் செய்யக்கூடாது. நெருங்கிய நண்பருக்கு பண உதவி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வியாபாரத்தில் சரளமான போக்கு காணப்படும். அவசிய செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சனைகளை எதிர் நோக்கலாம். குல தெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலைச்சல் அதிகமாகும். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணச் செலவு கூடும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: அரசாங்கத்திலிருந்து பாராட்டும் பரிசும் கிடைக்கும். பெரியோர்களின் நட்பு பக்கபலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: போக சுகங்களில் அதிக ஆர்வம் ஏற்படும். புரிந்து கொள்ளாத உறவினர்களால் சங்கடம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சூது நிறைந்த வியாபாரங்களில் இறங்கக்கூடாது. 2 மனைவி பிள்ளைகளிடம் கோபமாக பேசக்கூடாது. 3 கண்டபடி செலவு செய்து கடனாளியாக வேண்டாம். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

 

மிதுன ராசி அன்பர்களே! மிக சிறப்பான நன்மைகள் வந்து சேரும் நாள். அழகிய வீட்டில் ஆடம்பரமான வாழ்க்கை நடக்கும். எதிரியும் புகழ்ந்து பாராட்டும் நிலை ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தர்ம காரியங்கள் செய்யும் பாக்கியம் ஏற்படும். அரசாங்க உதவி வந்து சேரும் அலுவலகத்தில் பண வரவு அதிகரிக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூமி லாபம் அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பெரியோர் நட்பு உதவியாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: கொடுத்த வாக்குறுதி காப்பாற்ற இயலாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை இடத்தில் செய்யாத குற்றம் மன உளைச்சலை தரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கார் ஓட்டும்போது வேகக் கட்டுப்பாடு முக்கியம். 2 வரவு செலவு கணக்குகளில் அதிக கவனம் தேவை. 3 வங்கி கணக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

 

கடக ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும். தொழில் துறையில் எதிர்பாராத நன்மை ஏற்படும். ஆட்சியாளர்களின் பாராட்டு கிடைக்கும். சன்மானமும் புகழும் வந்து சேரும். இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். அலுவலகங்களில் பதவி ஏற்றம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிக்கும்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூமி லாபம் பெறுவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக வருமானம் அடைவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருள் சேர்க்கை பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

அரசு அதிகாரிகளின் சகாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் தொழிலை மேம்படுத்தும்.

இன்று உங்கள் பலவீனம்:

நெருங்கிய நண்பர்களால் சிறு பிரச்சனை உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வர தாமதமாகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வரவு செலவு கணக்கில் கவனமாக இருக்க வேண்டும்.

2 ஆன்லைன் சூதாட்டங்கள் ஈடுபட வேண்டாம்.

3 ஆசை வார்த்தைகளை நம்பி அகலக்கால் வைக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! வெற்றிகரமான நடக்கும் நாள் இன்று. செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைச் செல்வம் உண்டாகும்‌ மங்கல காரியங்கள் நடக்கும். கையிருப்பு அதிகரிக்கும். சிறப்பான எதிர்காலம் அலுவலகத்தில் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டு உற்சாகப்படுத்தும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். தூரத்து உறவினரின் வேண்டுகோள் உங்களால் நிறைவேறும். பண வரவு தாராளமாக இருக்கும். கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மதிப்பு பெறுவார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புகழ் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: மனத்துணிவோடு சில காரியங்களை செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு உதவ நெருங்கிய நண்பர் காத்திருப்பார். இன்று உங்கள் பலவீனம்: உறவுகளின் மத்தியில் ஏற்படும் சலசலப்பு உங்களை பாதிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தாதீர்கள். 2 வரவு செலவு கணக்கு சரியாக எழுதப்பட வேண்டும். 3 அலைபாயு மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! கொஞ்சம் தாமதமாக நன்மைகள் நடக்கும் நாள். அலுவலகத்தில் முக்கிய வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்துக்கு இருந்த இடையூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். குடும்பச் செலவு அதிகரிக்கும். கையில் இருந்த பணம் கரையும். வெளியூர் பயணங்களில் மூலம் பலன் கிடைக்கும். ஆனால் அலைச்சலும் உடல் அசதியும் ஏற்படும். வெளிநாட்டு பயணம் ஏற்பாடுகள் நடக்கும். குலதெய்வம் அருள் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் குறையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்ப்புகள் மறையும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியம் நடக்கும். இன்று உங்கள் பலம்: அரசியல்வாதிகளின் உதவி தக்க நேரத்தில் பயன்படும் பெரியோர்களின் ஆதரவு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது. மனதை போட்டு குழப்பிக் கொள்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வங்கி வரவு செலவு அலட்சியம் கூடாது. 2 கடன் தருவதாக சொல்லும் தொலைபேசியை நம்ப கூடாது . 3 வீட்டு பிரச்சனைகளை அலுவலகத்திற்கு பேசக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

 

துலாம் ராசி அன்பர்களே! அதிரடியான திருப்பங்கள் நடக்கும் நாள். வெளிநாட்டில் இருந்து தேவையான உதவி கிடைக்கும். வியாபாரம் மள மளவென்று நடக்கும். தொழில் துறையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் விருந்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு செய்யப்படும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தன தானிய யோகம் அதிகரிக்கும். வெளிவட்டார செல்வாக்கு உற்சாகப்படுத்தும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும் . இன்று உங்கள் பலம்: புதிய உத்திகள் மூலமாக தொழில் மேம்படுத்தப்படுவது. எதையும் திட்டமிட்டு மன உறுதியோடு செய்வது. இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் செயல்களால் மனச்சங்கடம் அடைவது. பிள்ளைகளுக்காக கவலைப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள ஆசை வார்த்தைகளை நம்பக்கூடாது. 2 அலட்சியமாக வேலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 3 சரியான நேரத்தில் காரியம் முடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

 

விருச்சிக ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன்களை சந்திக்கும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சங்கடப்படுத்தும். வேலை இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மேலதிகாரிகள் கண்பார்வை உங்கள் மீது இருக்கும். சரியான நேரத்தில் வேலையை முடிக்க திட்டம் போட வேண்டும். வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். திடீர் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பொறுப்பு அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாகன வெற்றி கிட்டும். இன்று உங்கள் பலம்: நெருங்கிய உறவினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: வாகனப் பொழுது ஏற்பட்டு சிரமப்படுத்தும். தொழிலில் சில சங்கடங்கள் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். 2 அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். 3 அனாவசிய செலவுகள் செய்ய வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். தொலைதூர சொந்தங்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்தில் இருந்த இழுபறி தீரும். மனை இடம் வாங்கும் ஆசை நிறைவேறும். தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பாக இருக்கும். நீண்ட தூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் மிகச் சிறந்த வருமானம் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். யோக பலன் அதிகரிக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு அதிரடி மாற்றம் உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் வேண்டியது நினைத்த காரியம் ஈடேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: பொருளாதார உயர்வு உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். அரசாங்க ஆதாயம் தாமதம் இல்லாமல் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: நேரத்திற்கு சாப்பிட முடியாத அளவிற்கு வேலை அழுத்தம் இருக்கும். இரவு நேர பயணங்கள் செய்யும் சூழ்நிலை உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அரசு அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 குணமறிந்து நண்பர்களிடம் பழக வேண்டும். 3 அந்நிய பெண்களிடம் நெருக்கம் இருக்கக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

 

மகர ராசி அன்பர்களே! உன்னதமான பலன்கள் நடக்கும் நாள். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கைக்கு வரும் அவசியமான கடன்கள் அடைக்கப்படும் பண வரவு அதிகரிக்கும் தொழில் துறைகளில் இருந்த எதிர்ப்புகள் மறையும் வேலை உயர்வு பதவி மாற்றம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தை நடக்கும் உங்களின் வேலைத் திறன் வெகுவாக பாராட்டப்படும் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும் தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு யோக பலன் பெருகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படும். இன்று உங்கள் பலம்: அரசாங்க உதவி தடையில்லாமல் வந்து சேரும். பெரிய மனிதரின் ஆதரவும் பக்கபலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: நண்பருக்கு ஏற்பட்ட பிரச்சனை உங்களை பாதிக்கும். இரவு நேரத்தில் தூக்கம் கெடும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணப் பரிவர்த்தனையில் நிதானம் தேவை. 2 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் தரக்கூடாது. 3 நகைகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

 

கும்ப ராசி அன்பர்களே! வெற்றி மீது வெற்றி வந்து சேரும் நாள். திடீர் வரவுகள் வந்து மனசு திருப்திப்படுத்தும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். பண வரவு எதிர்பார்த்ததை விட அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் அசத்தலான காரியம் பார்ப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு மன மகிழ்ச்சி தரும். செல்வமும் செல்வப்பெருக்கும் உண்டாகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பு கிடைக்கும். இன்று உங்கள் பலம்: அரசாங்க உதவி உடனே கிடைத்து அசந்து போவீர்கள். உறவினர்களின் ஆதரவு பக்க துணையாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: அனாவசிய செலவு வந்த அச்சுறுத்தும். உறவினர்களின் வருகையால் வேலை பாதிப்பு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கேளிக்கை விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளக்கூடாது. 2 தவறான நட்புகள் சிக்கலை ஏற்படுத்தும். 3 நோய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! சற்று மத்தியபமான பலன்கள் நடக்கும் நாள். வண்டி வாகன ஆதாயம் ஏற்படும். அதே நேரத்தில் பொருளாதார இழப்பும் சிரமப்படுத்தலாம். தொழில்துறையில் யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பண வரவு சரளமாக இருக்கும். வேலை இடத்தில் சுமை அதிகரித்தாலும் பக்குவமாக நடக்க வேண்டும். அரசு அதிகாரிகள் கடுமையாக இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மிதமாக பலன் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செலவுகள் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் வலிமை கூடும். இன்று உங்கள் பலம்: பகைவர்களால் ஏற்படும் இடையூறுகளை தடுப்பது.தொழிலை மேம்படுத்த கடின உழைப்பை போடுவது. இன்று உங்கள் பலவீனம்: பூர்வீக சொத்து வழக்கு சற்று சிரமத்தை உண்டாக்கும். வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சினை உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கேளிக்கை விஷயங்களில் ஆர்வம் கூடாது 2 கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 3 வேளை தவறி சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 9 – புரட்டாசி – பராபவ வருடம் சனி நாள் சனி திதி பௌர்ணமி (up to 10:19 pm) பிரதமை (up to September 27, 8:59 pm) நட்சத்திரம் பூரட்டாதி (up to 11:32 am) உத்திரட்டாதி (up to September 27,11:08 am) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 9:30 – 10:30 pm இராகு காலம் காலை 9.00 – 10.30 எமகண்டம் மதியம் 1.30 – 3.00 குளிகை காலை 6.00 – 7.30 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் மகம், பூரம் சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:58 PM சந்திரோதயம் Sep 26 5:44 PM சந்திர அஸ்தமனம் Sep 27 6:15 AM