ஈரானின் மிரட்டல்.! உயிருக்கு பயந்து டிரம்ப் செய்த செயல் – ரகசிய ஆபரேஷன் அம்பலம்

 

அமெரிக்க அதிபரான டிரம்ப் உயிருக்கு பயந்து ரகசியமாக சிறிய ரக விமானத்தில் சென்ற தகவல் தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் விமானம் மாறி டிரம்ப் பயணம் செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துருக்கி அருகில் உள்ள ஈரான், தன்னை தாக்கிவிட கூடுமோ என்ற பயத்தில் பிரிட்டன் ராணுவ விமானத்தில் டிரம்ப் பயணம் செய்து உள்ளார்.

ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஜூலை 8-ஆம் தேதி அமெரிக்கா திரும்பி சென்றார். அங்காராவில் வழக்கமான தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏறிச் செல்வதை தொலைக்காட்சிகள் காட்டின. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்கே செல்கிறார் என்ற விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

அதே நேரம் விமானத்திற்குள் சென்ற சில நிமிடங்களில், டிரம்ப் மற்றும் அவரது முக்கிய அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்குத் தெரியாமல், விமானத்தின் மறுபக்க கதவு வழியாக வெளியேறினர். பின் அங்கிருந்த ஒரு விமான நிலைய உணவு விநியோக லாரிக்குள் (Catering Truck) டிரம்ப் ஏறிக்கொண்டார். அந்த லாரி அவரை தார்சாலையின் மறுபுறம் கொண்டு சென்றது.

Truck-லிருந்து இறங்கி, அங்கு தயாராக நின்றிருந்த C-32A என்ற சிறிய ரக ராணுவ விமானத்திற்குள் டிரம்ப் ஏறி அமர்ந்து ரகசியமாகப் பறந்தார்.இதன் மூலம் டிரம்ப் தனது வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே இருக்கிறார் என்று உலகம் நம்பிய போது, அவர் மாற்று விமானத்தில் பாதுகாப்பாக பயணித்தார்.

பிரிட்டனின் RAF மில்டன்ஹால் மான நிலையத்திற்கு இரு விமானங்களும் சில நிமிட இடைவெளியில் வந்திறங்கின. அங்கிருந்த ராணுவ வீரர்களைச் சந்திக்க டிரம்ப் மீண்டும் தனது வழக்கமான விமானத்திற்குள் ரகசியமாக மாற்றப்பட்டார். இதனால் அவர் அந்த விமானத்தில் தான் வந்தார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் வகையிலும், அவரது இறுதி ஊர்வலத்தின் போதும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் வெளிப்படையான முழக்கங்களும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. மேலும், டிரம்பைக் கொல்ல ஈரான் தரப்பிலிருந்து ரகசிய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக இஸ்ரேல் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.