நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2026.07.27 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கும் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலத்திற்கும் சட்டமா அதிபர் அவர்களின் அரசியலமைப்புடனான இணங்கியொழுகும் தன்மை பற்றிய ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த திருத்தச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



