திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மூதூர் -கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் வயது (21), அருணவன் செல்வரெத்தினம் வயது (19)ஆகிய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



