மேஷம் : பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு வரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர்.
ரிஷபம் : பொது காரியங்களில் ஈடுபடுவீர். சோர்வு நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் இருந்த மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிக்கவும்.
மிதுனம் : இழுபறியாக இருந்த பணிகள் நிறைவு பெறும். தந்தையாருடன் இருந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
கடகம் : வெளிவட்டாத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்களின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாதீர்.
சிம்மம் : எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்லவரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
கன்னி : குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர். வியாபாரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்.
துலாம் : திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் நிம்மதி தங்கும். இழுபறியாக இருந்த அரசு வேலைகள் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம் : மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல், டென்ஷன் வரலாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். அவசரப்பட்டு வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்காதீர். பயணங்கள் அலைச்சல் தரும். அலுவலகத்தில் ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
தனுசு : வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும்.
மகரம் : தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவு திருப்தி தரும். முன்கோபத்தை தவிர்ப்பீர். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம் : தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தம்பதிக்குள் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். பணியாட்கள் அன்பாக இருப்பர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி ஆதரவு தருவார்.
மீனம் : விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் மறையும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
ஆவணி 31 | வியாழக்கிழமை
திதி: சஷ்டி காலை 10.48 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: அனுஷம் இரவு 7.53 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: விஷ்கம்பம் நண்பகல் 12.48 வரை. பிறகு பிரிதி.
நாமகரணம்: தைதுலம் காலை 10.48 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் இரவு 7.53 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: பரணி
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.08.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 7
பரிகாரம்: தைலம்



