காதல் திருமணம் முடிந்த கையோடு படுக்கையறையில் இருந்த பைக்கை வெளியேற்ற வைத்துவிட்டதாக கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஜஹீர் தன் உயிருக்கு உயிரான பைக்கை வெளியேற்றிவிட்டார்.
ஜாலி ஜோடி: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், நடிகர் ஜஹீர் இக்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம். திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் போடும் போஸ்ட்டுகளை பார்க்கும் சிங்கிள்ஸோ, கல்யாண வாழ்க்கை ரொம்ப ஜாலியாக இருக்கும் போலயே என்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவர்கள் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அண்மையில் மெலடி சாக்லேட் கிடைக்காமல் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகவே அந்த நேரத்தில் மெலடியை வைத்து ஜஹீர் இக்பாலும், சோனாக்ஷியும் வெளியிட்ட வீடியோ வைரலானது. பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த மெலடியை வைத்து இப்படியொரு வீடியோ வெளியிட தைரியம் தான் என்றார்கள் ரசிகர்கள்.
பெட்ரூமில் பைக்: இந்நிலையில் கணவருக்கு பைக் எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். நோ ஃபில்டர் நேஹா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனாக்ஷி சின்ஹா கூறியதாவது,
ஜஹீருக்கு அவரின் டுகாட்டி பைக் என்றால் உயிர். அந்த விலை உயர்ந்த பைக்கை வீட்டில் அதுவும் படுக்கை அறையில் வைத்திருந்தார். நாங்கள் காதலித்த காலத்தில் ஜஹீரின் படுக்கையறையில் டுகாட்டி பைக் இருந்தது. எங்களுக்கு திருமணம் நிச்சயமான பிறகும் பைக் வெளியே வரவில்லை. திருமணம் முடிந்த பிறகு தான் நான் அவருக்கு நிபந்தனை விதித்தேன்.
நான் உன்னை தான் லவ் பண்ணுகிறேன் ஜஹீர். உன் டுகாட்டி பைக்கை இல்லை. அதனால் படுக்கையறையில் நான் தான் இருக்கணுமே தவிர பைக் இல்லை என்றேன். அதன் பிறகே படுக்கையறையில் இருந்து அந்த பைக்கை வெளியேற்றினார். ஆனால் அது இன்னும் வீட்டிற்குள் தான் இருக்கிறது என்றார்.ஜஹீர் இக்பாலின் சென்டிமென்ட் எங்களுக்கு புரிகிறது. எங்களிடம் டுகாட்டி இருந்தால் நாங்களும் அதை படுக்கையறையில் தான் நிறுத்தி வைத்திருப்போம். ஜஹீர் நீங்க நம்ம ஜாதி என்கிறார்கள் பைக் பிரியர்கள்.
பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் செல்ல மகளான சோனாக்ஷியோ சல்மான் கான் ஜோடியாக திரையுலகிற்கு வந்தார். தபாங் படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரையும் தன் நடிப்பை பற்றி பேச வைத்தார். வாரிசு நடிகைகளில் ரொம்ப திறமையானவர் என பெயர் எடுத்துவிட்டார். தன் முதல் பட ஹீரோவான சல்மான் கான் கடந்த 2017ம் ஆண்டு கொடுத்த பார்ட்டிக்கு சென்ற இடத்தில் தான் ஜஹீர் இக்பாலை முதல் முறையாக சந்தித்தார் சோனாக்ஷி. நட்பாக பழக ஆரம்பித்து அது காதலாக மாறியது. ஆனால் காதல் ஏற்பட்டதை முதலில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள்.
இருந்தாலும் அந்த காதலை கண்டுபிடித்துவிட்டார் சல்மான் கான். தன் நண்பனின் மகனான ஜஹீரும், தன் பட நடிகையான சோனாக்ஷியும் வெறும் நண்பர்கள் இல்லை, காதலர்கள் என்பதை அவர்கள் நடந்து கொண்ட விதத்தை வைத்து புரிந்து கொண்டார். ஏம்மா, நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என சோனாக்ஷியிடம் கேட்டதற்கு, அப்படி எல்லாம் எதுவும் கிடையாது பாய் என்று கூறியிருக்கிறார். இந்த பாருமா, உங்களுக்கு காதல் முறிவு ஏற்பட்டால் நீயும் என்னிடம் தான் வந்து சொல்லி அழுவ, அவனும் என்கிட்ட தான் வந்து புலம்புவான். நான் யார் சைடையும் எடுக்க முடியாது. எனக்கு நீங்கள் இருவருமே முக்கியமானவர்கள் என சோனாக்ஷியிடம் தெரிவித்திருக்கிறார் சல்மான் கான். அவர் இப்படி காதலை கண்டுபிடித்து கேட்பார் என எதிர்பார்க்கவில்லை என்றார் சோனாக்ஷி சின்ஹா.



