பிரான்ஸில் சோகம்: கடும் வெப்ப அலையால் ஜூன் மாதம் மட்டும் 2,025 பேர் பலி!

 

பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,025-ஆக அதிகரித்து உள்ளது. 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெப்பம் கொளுத்துவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஜூன் மாதத்தில் பிரான்ஸின் வெப்பநிலை 40ஊC வரை உயர்ந்ததன் காரணமாக அந்நாட்டின் தலைநகரான பாரிஸ் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உச்சபட்ச வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஜூன் மாதத்தின் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில், கடைசி வாரத்தில் உயிரிழப்புகள் 29% அதிகரித்து காணப்பட்டதாகவும், குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் உயிரிழந்ததாகவும், பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் தகவல் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் சில பகுதிகள் (இங்கிலாந்து உட்பட) இந்த வார இறுதி முதல் மேலும் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், பிரான்ஸ் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.Executive Branch

மேலும் இந்த இறப்பு எண்ணிக்கைகள் மின்னணு இறப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதால், முழுமையான தரவுகள் தொகுக்கப்படும் போது உண்மையான பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் பிரான்ஸ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இதனிடையே வரும் நாட்களில் ஐரோப்பா கண்டம் முழுவதும் மேலும் தீவிரமான வெப்பநிலை நிலவும் என்று வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன.