தினமும் வெயிலில் சுற்றுவதால் நமது சருமம் பொலிவிழந்து கருத்து போகக்கூடும். சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும் 100 சதவீதம் சூரிய ஒளியை தடுக்க செய்யாது அதேபோல் ஏற்கனவே கருத்த சருமத்தை உடனடியாக சரிசெய்யாது. இதற்காக பார்லரில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய தேவையில்லை.
உங்க கிச்சனில் இருக்கும் எளிய பொருட்களே வைத்தே, இறந்த செல்களை நீக்கி சருமத்தை மீண்டும் பிரகாசமாக மாற்ற செய்யலாம். அத்தகைய நேச்சுரல் De-tan பேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
De-tan பேஸ் மாஸ்க் தேவையான பொருட்கள்
காபி தூள் – 2 டீஸ்பூன்
மசூர் பருப்பு பொடி – 2 டீஸ்பூன்
முல்தானி மெட்டி – 2 டீஸ்பூன்
வறுத்த மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் – 2 டீஸ்பூன்
தக்காளி விழுது – 2 டீஸ்பூன்
ஒரு சுத்தமான பவுலில் காபி தூள், மசூர் பருப்பு பொடி, முல்தானி மெட்டி மற்றும் வறுத்த மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். ஏதேனும் பொருள் கொரகொரப்பாக இருந்தால், முதலில் மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
இதனுடன் தக்காளி விழுது மற்றும் தயிர் சேர்த்து, கட்டிகள் இல்லாத வகையில் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.
முதலில் முகத்தை மைல்டு பேஷ் வாஷ் அல்லது வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்
கண்கள் மற்றும் உதடு பகுதியை தவிர்த்து, முகம் மற்றும் கழுத்து பகுதியில் தயாரித்துள்ள கலவையை சீராக தடவ வேண்டும்
இதை 15 முதல் 20 நிமிடங்கள் அல்லது ஓரளவு காயும் வரை அப்படியே விட வேண்டும்
நன்றாகக் காய்ந்ததும், முகத்தில் லேசாக தண்ணீர் தெளித்துவிட்டு குறைந்தது 1 நிமிடம் வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது இறந்த செல்களை நீக்க உதவும்.
பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவிவிட்டு, மென்மையான துணி கொண்டு ஒற்றி எடுக்க வேண்டும். அழுத்தி தேய்க்கக்கூடாது.
இறுதியாக ஈரப்பதத்தை தக்கவைக்க உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும்
கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக முறை ஸ்க்ரப் செய்தால் சருமம் பாதிக்கப்படலாம்.
முதன்முறையாக பயன்படுத்துவதற்கு முன்பு கையின் ஒரு பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்து ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முகத்தில் வெட்டுகள், பருக்கள், புண்கள் இருந்தால் அல்லது ஷேவிங் செய்த உடனேயோ இதை தடவக் கூடாது.
பொறுப்பு துறப்பு: இது சருமப் பொலிவிற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம் மட்டுமே.



