இந்த ஆண்டு இதுவரை இந்தியாவிலிருந்து தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி நிலவரப்படி, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,436,926 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்களில் 358,608 பேர் இந்திய சுற்றுலாப் பயணிகள் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 140,892 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 94,890 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 83,965 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்த நாடுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 93,511 சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 49,759 சுற்றுலாப் பயணிகளும், இரண்டாம் வாரத்தின் 6 நாட்களில் 43,752 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தின் 13ஆம் திகதி நிலவரப்படி, 20,378 இந்திய சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் இந்தியர்கள் என பதிவாகியுள்ளது.
இரண்டாவது அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிலிருந்து 10,491 பேரும், பிரான்சிலிருந்து 7,198 பேரும், சீனாவிலிருந்து 6,383 பேரும் வருகை தந்துள்ளதாக தரவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.



