மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன் -நல்ல நேரம் 25ஜூன்

 

மேஷம்: சோர்வு நீங்கி தன்னம்பிக்கை, சுறுசுறுப்புடன் செயல்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர்.

ரிஷபம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

மிதுனம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்துடன் சென்று ஊர் விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு மனநிறைவை தரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். முன்கோபத்தை குறைப்பீர். ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக சில முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். கையில் பணம் புரளும். அலுவலகரீதியாக இருந்து வந்த பிரச்சினை விலகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.

கன்னி: சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்காதீர். உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: ஓரளவு பணவரவு இருக்கும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும். உரிய அங்கீகாரம் பெற அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

தனுசு: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் அனைவருடனும் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் சிறக்கும்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிட்டும். மாறுபட்ட அணுகுமுறையால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: சில காரியங்களை முடிப்பதில் தடைகள் வந்து போகும். பூர்வீக வீட்டை விற்பதற்கு முயற்சி செய்வீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர். வியாபாரத்தில் அலைந்து திரிந்து பாக்கியை வசூலிப்பீர்.

திதி: ஏகாதசி இரவு 8.10 வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: சுவாதி மாலை 4.29 வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: சிவம் காலை 10.52 வரை. பிறகு சித்தம்.

நாமகரணம்: வணிசை காலை 7.09 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.

யோகம்: அமிர்தயோகம் மாலை 4.29 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.

சந்திராஷ்டமம்: ரேவதி மாலை 4.29 வரை. பிறகு அசுவினி.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44.

அஸ்தமனம்: மாலை 6.38.

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை: காலை 9.00 – 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4

பரிகாரம்: தைலம்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை