மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி கள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.
ரிஷபம்: அவசர முடிவுகளை எடுக்காதீர். எதிலும் நிதானமாக செயல் படவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் பேச்சில் கவனம் தேவை.
மிதுனம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வர வாய்ப்பு உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.
கடகம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும்.
சிம்மம்: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.
கன்னி: குடும்பத்தாருடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
துலாம்: சிக்கனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் விவாதம் வேண்டாம். உறவினர் அன்புத் தொல்லை உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
விருச்சிகம்: சந்தர்ப்ப, சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் தள்ளிப் போன சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
தனுசு: அடுக்கடுக்காக வந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அறிவுரை தருவார்கள். சக ஊழியர்கள் மதிப்பர்.
மகரம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினை களை முடிப்பீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்த கருத்துமோதல் விலகும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பார். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
ஆவணி 17 | வியாழக்கிழமை
திதி: சப்தமி பின்னிரவு 2.26 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: கார்த்திகை நள்ளிரவு 12.29 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: வியாகாதம் மாலை 6.32 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: விஷ்டி பிற்பகல் 3.28 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: சுவாதி
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.18.
ராகு காலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 9
பரிகாரம்: தைலம்



