இன்றைய சூழலில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் தோராயமாக மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பாலின பேதமின்றி பிறவி இதய குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் மூன்று வகையினதான பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்குகிறார்கள். அதில் கிளென் சிகிச்சை முறை முழுமையான நிவாரணத்தை அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பெரும்பாலும் இதய ரத்த ஓட்டத்தை தடை செய்யும் வகையில் பிறவி இதய குறைபாடு ஏற்பட்டிருக்கும் பிள்ளைகளுக்கு… அவர்களுடைய பாதிப்பின் தன்மையை துல்லியமாக பிரத்யேக பரிசோதனைகள் மூலம் அவதானிப்பர் . குறிப்பாக டிரைகஸ்பிட் அட்ரீஸியா… ஹைப்போபிளாஸ்ரிக் லெஃப்ட் ஹார்ட் வென்டிரிகள் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பிள்ளைகளுக்கு கிளென் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு ரத்த ஓட்டத்தை நுரையீரல்களுக்கு திருப்பி விடப்படுகிறது. அத்துடன் குருதியில் உள்ள ஓக்சிஜனின் அளவும் மேம்படுத்த உதவுகிறது. அதன் பிறகு பிள்ளைகளின் இதய செயல்பாடு சீராக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சை குழந்தைகள் பிறந்து சில மாதங்களுக்குள் மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். ஆறு வயதிற்குட்பட்டவர்களுக்கும் இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலும்.




