பிரான்ஸில் மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

 

பிரான்ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு நேற்று தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர்.

பி​ரான்ஸ் நாட்​டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இரு தலை​வர்​களும் இணைந்து ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ மாநாட்டை தொடங்கி வைத்​தனர்.

பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா நாடு​களில் பிரதமர் மோடி 6 நாட்​கள் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக டெல்​லி​யில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்​பட்​டுச் சென்​றார். இந்​நிலை​யில், பிரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்​கியது.

இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மாநாட்​டில் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து 500-க்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்​றுள்​ளனர்.

பிரதமர் மோடி​யும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரானும் மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா – பிரான்ஸ் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​களும் ஒன்​றிணைந்து பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன. குறிப்​பாக, உலக நாடு​கள் எதிர்​கொள்​ளும் பல்​வேறு சவால்​களுக்கு இணைந்து தீர்வு காண்​கின்றன. சூரிய சக்​தி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஆகிய துறை​களில் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.

‘இந்​தியா – பிரான்ஸ் புதுமை கண்​டு​பிடிப்​பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறி​வித்​துள்​ளோம். இதன் ஒரு பகு​தி​யாகவே ‘பாரதத்​தின் புதுமை கண்​டுபிடிப்​பு​கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்​மூலம் இந்​தியா, ஐரோப்பிய நாடு​களின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் இடையே நேரடி தொடர்பு ஏற்​படும்.

இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் புரட்சி நடந்து வரு​கிறது. எங்​கள் நாட்​டில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் செயல்​படு​கின்​றன. இதில் 125 நிறு​வனங்​கள் மாநாட்​டில் பங்​கேற்​றுள்​ளன. அதிக ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களைக் கொண்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தியா 3-வது இடத்​தில் உள்​ளது.

ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் இந்​திய கிராமங்​களில் வசிக்​கும் மக்​களின் வாழ்க்​கைத் தரம் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. ஹைட்​ரஜன் எரிசக்​தி, மின்​சார வாக​னங்​கள், புதிய பேட்​டரி தொழில்​நுட்​பங்​கள் என இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன.

ஏஐ, குவான்​டம் கம்ப்​யூட்​டிங், பயோ டெக்​னாலஜி, விண்​வெளி தொழில்​நுட்​பம், கனிம வளம் சார்ந்த தொழில்​நுட்​பம் ஆகிய துறை​களில் இந்​தியா முன்​னோடி​யாக உரு​வெடுத்து வரு​கிறது. உலக நாடு​களின் தேவை​களை கருத்​தில் கொண்டு மனித குலத்​துக்கு சேவை​யாற்ற இந்​திய நிறு​வனங்​கள் புதிய தொழில்​நுட்​பங்​களைக் கண்​டு​பிடித்து வரு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் உலக மக்​கள் அனை​வருக்​கும் கிடைக்க வேண்​டும் என்​பதே இந்​தி​யா​வின் லட்​சி​யம்.

புது​மை​களைக் கண்​டு​பிடிப்​பது இந்​தி​யர்​களின் மரபணுவோடு கலந்​திருக்​கிறது. ஒரு காலத்​தில் உலகத்​தின் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தும் நாடாக இந்​தியா இருந்​தது. இப்​போது உலகத்​துக்கு தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது. இந்த நேரத்​தில் இந்​தி​யா​வில் முதலீடு செய்ய உலக முதலீட்​டாளர்​களுக்கு அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.