கோர விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்! ஐவர் பலி

 

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஒன்று இன்று (13) அசாமின் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் இருந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜோர்ஹாட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஏஎன்-32 விமானம், இந்திய விமானப்படையின் 43வது படைப்பிரிவைச் சேர்ந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன