ஹனுமனையே வட்டமாக சுற்றி வந்த விநோத நாய்.. 5 நாள் சாப்பிடல!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமம் கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.. இதற்கு காரணம் ஒரு நாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நாய்க்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற குழப்பம் ஒருபுறமும், எல்லாம் தெய்வ செயல் என்று பரவசம் மறுபுறமும் சூழ்ந்துள்ளது..

உண்மையிலேயே என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்? நந்த்பூர் கிராமத்தில் உள்ள பழமையான ஒரு கோவிலில், ஒரு நாய் கடந்த ஐந்து நாட்களாக இடைவிடாமல் கோவிலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது..

ஹனுமான் மற்றும் துர்க்கை சிலைகளையே சுற்றி நடந்து கொண்டே இருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஐந்து நாட்களிலும் அந்த நாய் சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை. 120 மணி நேரம் – 5 நாள் சாப்பிடல 120 மணி நேரம் தொடர்ந்து சுற்றி நடந்ததால், நாய் மிகவும் சோர்வடைந்தது. உடல் பலவீனம் தாங்க முடியாமல், ஒரே நேரத்தில் அது மயங்கி கீழே விழுந்தது. இதைப் பார்த்த மக்கள் பதறிப் போனார்கள்.

உடனே நாயை தூக்கி, ஒரு மெத்தையில் படுக்க வைத்து, போர்வையால் போர்த்தி பராமரிக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவம் காட்டு தீ போல அந்த பகுதி முழுக்க பரவிவிட்டது.. சோஷியல் மீடியாவிலும் வேகமாக பரவியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அந்த கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். பலர் அந்த நாயை “தெய்வ அருள் பெற்ற அதிசய நாய்” என்று நம்பி கும்பிட துவங்கிவிட்டார்கள்.. நாய்க்கு பிரசாதம், காணிக்கை வழங்கி, வணங்கினர்.. சிலர் இந்த நாயை பாபாவின் அவதாரம் என்கிறார்கள்…