..
கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. அப்போது துவங்கிய போர் சில நாட்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. அதாவது பாகிஸ்தானின் முன்னெடுப்பால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதேநேரம் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை ஏற்படவில்லை. எனவே ஹார்மூஸ் நீரிணை பகுதிகளில் மட்டும் அவ்வப்போது சில தாக்குதல்கள் நடந்து வருகிறது. ஒருபக்கம் ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி விடுகிறது.
இதனால் கோபமடைந்த ஈரான் தற்போது இஸ்ரேலை தாக்க துவங்கி விட்டது. இஸ்ரேலுடன் சண்டை போடுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.. ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது மீண்டும் போரை உருவாக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்..
ஆனால் இஸ்ரேல் அதைக் கேட்கவில்லை. ஈரானை தாக்குவோம் என தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் இஸ்ரேல் தனித்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் எச்சரித்தார்.
இந்நிலையில், இதையேற்று ஈரானுடன் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது ஒப்புக்கொண்டிருக்கிறார். அதேநேரம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தினால் பதில் தாக்குதல் மிக கடுமையாக இருக்கும் எனும் அவர் எச்சரித்திருக்கிறார்.




