கூட்டு பலாத்காரம் சிறுமியை மதுகுடிக்க வைத்துபலாத்காரம் – தோழி உள்பட 4 பேர் செய்த கொடூரம்

தானேயில் மதுகுடிக்க வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பொலிசார், தோழி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், காஷிகாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சம்பவத்தன்று அவரது தோழி விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தார். இதையடுத்து சிறுமி, சீத்தலுடன் விருந்துக்கு சென்றார்.

கூட்டு பலாத்காரம்
அவர்கள் மிரா ரோடு வினய்நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு நண்பர்கள் சிறுமியை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தனர்.

சிறிது நேரத்தில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் காலை வீடு திரும்பிய சிறுமி தனக்கு நேர்ந்த அவலம் குறித்து கூறினார்.

இதையடுத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக காஷிகாவ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் தோழி சீத்தல் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது செல்போன்களை அணைத்து வைத்துள்ளனர், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.