
செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள் வருமாறு;நீதிமன்ற தகவல் அறி
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மன்று கருதவில்லை.
காபன் டேட்டிங் பரிசோதனைக்கு அப்பால் எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
வயது வந்தவர்களுக்குச் சொந்நதமானவை எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்பு மாதிரி பரிசோதனையை (Bone Analysis Testing) முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புதல்.



