
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய இலஞ்ச ஊழல் வழக்குத் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (19) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.பயண வழிகாட்டி
தற்போது விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், அவரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றமை மற்றும் பணமோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் சிலருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.



