வெடித்தது சர்ச்சை முருகனை ஒப்பிட்டு முதலமைச்சரை பாடுவதா சர்ச்சைக்கு விளக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின் நேரலை வர்ணனையின் போது, நாட்டுப்புற பாடகரும், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களிலும் ஆன்மிக வட்டாரங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வேலெடுத்து பகை முடித்த…” என்று தொடங்கும் அந்த பாடலில், தமிழக முதல்வர் விஜய்யை முருக பெருமானோடு ஒப்பிட்டு பாடியிருப்பதாக கூறி முருக பக்தர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் முதல்வரை முருகனுடன் ஒப்பிட்டு பாடவில்லை என்றும், “தமிழக முதல்வர் போல, முருகனிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம்” என்ற பொருளில்தான் அந்த வரிகளை பாடியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வரை ஒரு சாட்சியாக மட்டுமே சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது இந்த விளக்கம் ஆன்மிகவாதிகளையும் பக்தர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கந்தசஷ்டி விழாவில் ஆன்மிக நிகழ்வை அரசியல்மயமாக்கியதாகக்கூறி பெரும் சர்ச்சையாகியுள்ளமி குறிப்பிடத்தக்கது.