உலகளாவிய மைக்ரோசொப்ட் தொழில்நுட்ப கோளாறு- விமான சேவைகள் பாதிப்பு!

 

உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் சேவைகளில் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பத் தடை காரணமாக, இந்தியாவிலும் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்ப முடக்கத்தினால் இண்டிகோ மற்றும் ஆசா எயார் உள்ளிட்ட முன்னணி இந்திய விமான நிறுவனங்களின் மின்னஞ்சல் ஆதரவு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகளுடனான தகவல் தொடர்புகளில் தாமதம் ஏற்பட்டதுடன், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தின.

இந்தியாவின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சில சேவைகளில் தாக்கங்கள் ஏற்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாட்டுச் சவால்கள் காரணமாகச் சில விமானங்கள் இரத்து செய்யப்படுவதாகவும், சில விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு பயணிகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

எயார் இந்தியா நிறுவனத்தின் விமான இயக்கங்கள் மற்றும் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்த போதிலும், தடையற்ற தகவல்தொடர்புக்காக தற்காலிகமாக மின்னஞ்சல் வழிகள் மாற்றியமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டன.

விமான நிலையங்களுக்குப் புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை முகூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகளாலும், விமான நிறுவனங்களாலும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.