போதிய அறிவின்மை
தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்பட முக்கிய காரணம் உடலுறவு குறித்த போதிய அறிவின்மைதான். இது பெரும்பாலும் புதிதாக திருமணமானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையாகும். உடலுறவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதில் ஈடுபடும் போது ஏற்படும்
பதட்டத்தால் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால் விரைவில் விந்து வெளியேறிவிடலாம். உடனே உங்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்று கவலைகொள்ளாதீர்கள். சிலநாட்களிலிலேயே அது சரியாகிவிடும்.
மனநிலை
தற்காலிக ஆண்மைக்குறைவை உண்டாக்குவது உங்கள் மூளைதான். அதாவது உங்களுடைய மனநிலை. புதிதாய் திருமணமானவர்களில் 50 சதவீதத்தினருக்கு தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக ஆய்வுமுடிவுகள் கூறுகிறது. இதில் 90 சதவீத்தினருக்கு பயத்தால்தான் இந்த பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். திருமண நேர மனஉளைச்சல், மனைவியுடன் போதிய தொடர்பின்மை, சோர்வு என பல காரணங்கள் இணைந்து தற்காலிக ஆண்மைக்குறைவை ஏற்படுத்துகிறது.
விரைப்புத்தன்மை
ஆண்கள் தங்களுக்கு ஆண்மைக்குறைவு இருக்குமோ என்று பயப்பட முக்கிய காரணம் அவர்களின் விரைப்புத்தன்மையாகும். விரைப்புத்தன்மையில் மூன்று வகை உள்ளது. விரைத்தாலும் உறுதியாக இல்லாதது, குறைவான உறுதியுடன் இருத்தல், உறுதியாக இருந்தாலும் குறைந்த நேரமே இருத்தல். விரைப்புத்தன்மையில் பிரச்சினை ஏற்படுவது மட்டும் ஆண்மைகுறைவாகாது. ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் உங்கள் ஆண்குறி விரைப்படைந்து ஆனால் உறுதியாக இல்லாவிட்டால் அதுதான் ஆண்மைகுறைவாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளது சோர்வு, அதிக வேலைப்பளு, ஓய்வின்மை போன்றவை தற்காலிக ஆண்மைக்குறைவை ஏற்படுத்தலாம்.
துணையை பொருத்து ஏற்படுதல்
இந்த வகை ஆண்மைகுறைவில் இருவரின் பங்குமே உள்ளது. கணவன், மனைவிக்குள் போதிய புரிதலின்மை அல்லது காதலுடன் உடலுறவில் ஈடுபடாமல் கட்டாயத்திற்காக ஈடுபடும்போது நிச்சயம் விரைப்புத்தன்மையில் பிரச்சினை ஏற்படும். இதன் அர்த்தம் உங்களுக்கு ஆண்மைக்குறைவு உள்ளது என்றல்ல உங்களுக்குள் காதல் குறைவாய் இருக்கிறது என்று. இதனை சரிசெய்ய மனைவியும் உதவி புரியவேண்டும்.
உச்சக்கட்டம்
நல்ல தாம்பத்யம் என்பது கணவன், மனைவி இருவருக்குள்ளும் புரிதலை ஏற்படுத்தி காதலை அதிகரிக்கும். பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டம் என்பது மிக முக்கியமானது. தன் துணையால் அவர்களுக்கு உச்சகட்டத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்போது தன் கணவருக்கு ஆண்மைக்குறைவு உள்ளது என்று அவர்கள் எண்ணலாம். ஆனால் அது உண்மையல்ல. உச்சக்கட்டம் என்பது ஆண் , பெண் இருவருக்கும் வேறுபாடும். எனவே அதற்கு சில காலம் தேவைப்படும்.
விந்து வெளியேறுதல்
விந்து விரைவாக வெளியேறுவதே ஆண்மைக்குறைவு என நினைக்கும் ஆண்கள் பலர் உள்ளனர். பெண்ணுறுப்புக்குள் செல்லும் முன்னரோ அல்லது குறைந்த நேரத்திலியே விந்து வெளியேறுவதே ஆண்மைகுறைவு என்று பல காலமாக ஒரு பொய் கூறப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல. ஆண்மைகுறைவிற்கும், விந்து விரைவாக வெளியேறுவதற்கு இடையில் ஏற்பட்ட குழப்பம்தான் இது. விரைவாக விந்து வெளியேறுவது பதட்டத்தாலும், போதிய அறிவின்மையாலும் ஏற்படுவதே. ஆண்மைக்குறைவு என்பது உங்கள் ஆணுறுப்பு விரைப்புத்தன்மையே அடையாமல் இருப்பதும் விரைப்படைந்தாலும் உறுதியாக இல்லாமல் இருப்பதுதான்.
சுயஇன்ப பிரச்சினை
சுயஇன்பம் காண்பது என்பது அனைத்து ஆண்களுக்குமே உண்டானது. ஆனால் சிலர் சுயஇன்பம் காண்பதால் ஆண்மை குறைந்துவிடும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதனாலேயேஉடலுறவு பதட்டத்தில் விரைப்புத்தன்மையில் பிரச்சினை ஏற்படும் போது சுயஇன்பத்தால் தனக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். உண்மையில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது சுயஇன்பம் காண்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படாது என்பதுதான்.
சிகிச்சை
தற்காலிக ஆண்மைக்குறைவிற்கு ஒரே சிகிச்சை உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைதான். மன அமைதி, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு, உங்கள் மனைவியுடன் காதலாய் பழகுதல் இவையே இதனை சரிசெய்ய போதுமானது. தேவைப்பட்டால் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்றுகொள்ளுங்கள்