போர் இன்னும் ஓயவில்லை.- டிரம்ப் கருத்துக்கு இஸ்ரேல் மறுப்பு..

.

ஈரானுக்கு எதிரான தங்களின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை என இஸ்ரேல் கூறி உள்ளது. தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணுஆயுதம் பெற முயற்சிப்பதாக ஈரான் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.

ஈரானுடன் இணைந்து தாக்குதல் நடத்த முயன்றால் ஹிஸ்புல்லா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மேலும் காஸா, லெபனான், சிரியாவில் உள்ள பாதுகாப்பு பகுதிகளில் இருந்து தங்களின் ராணுவம் பின்வாங்காது என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் இவ்விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான ராணுவ ரீதியிலான போர் “முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது” என்றும், இனி பெரிய அளவிலான தாக்குதல்கள் தேவையில்லை என்றுகூறி இருந்தார். இந்த நிலையில் ஈரானின் அணுஆயுத முயற்சி மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் “போரும் இல்லை, அமைதியும் இல்லை” என்ற நிலையில் இருப்பதாக ஈரான் தரப்பு கூறி உள்ளதுடன், நியாயமான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.