ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்ததில் இருந்தே, ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுவதாக கூறி வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், கடந்த 2017ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் லிம்பெட் கண்ணிவெடி தாக்குதல் தற்போதைய மோதலுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.இந்திய அரசியல்
ஓமனின் கசாப் பகுதியில் இருந்து 46 கி.மீட்டர் தொலைவில் பனாமா நாட்டின் கொடியுடன் 27 இந்திய மாலுமிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ‘எம்டி லூயிஸ் 1’ என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலின் அடிப்பகுதியில், ஒரு சிறிய படகில் வந்த மர்ம நபர்கள் 2 லிம்பெட் கண்ணிவெடிகளை இணைத்துவிட்டு தப்பினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பிடித்து கப்பல் தற்காலிகமாக செயலிழந்த போதிலும், இந்திய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பாதிப்பு ஏதுமின்றி கப்பல் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக ஒருநாள் முன்புகூட 2 இந்தியர்களுடன் சென்ற ‘எம்டி அர்சானா’ என்ற லைபீரிய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், ‘கப்பலில் உள்ள அனைத்து ஊழியர்களும் காயமின்றி பாதுகாப்பாக உள்ளனர்; அவர்களின் தொடர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கப்பல் நிர்வாக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நிலைமையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’ என்று கூறினார்.



