மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- நவம்பர் 01, 2026

 

 

மேஷ ராசி அன்பர்களே! எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் ஈடேறும். வியாபார விஷயத்தில் நிதானமாக நடப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு இருக்காது. குடும்பம் தொடர்பான முடிவுகளை நன்றாக யோசித்து எடுக்க வேண்டும். அலுவலகத்தில் அக்கறையோடு வேலை பார்க்க வேண்டும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத வரவு கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் நன்மை தரும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கலாம். பாசத்தோடு குழந்தைகள் நடந்து கொள்வார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் சிரமங்கள் வரலாம். பண வரவில் தடை உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி தாமதமாகலாம் . கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருங்கள். 2 ஒத்தி போடாமல் வேலையை முடிக்க பாருங்கள். 3 குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! சற்று ஏற்ற தாழ்வான பலன்கள் வந்து சேரும் நாள். மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் மற்றவர்களால் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முரண்பாடு வந்தாலும் அதனால் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது. வியாபாரம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. கூடுதல் கவனத்தோடு அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும். விற்பனையும் லாபமும் மிதமாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் வரலாம்.

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதானமாக திட்டமிடுங்கள்.

இன்று உங்கள் பலம்:

மனத்திண்மையோடு வேலை செய்வீர்கள். நண்பர்கள் வியாபாரத்திற்கு உதவலாம். உறவுகள் பாசத்தோடு இருப்பார்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

தேக ஆரோக்கியத்தில் சிரமம் ஏற்படலாம். பொருள் வரவு குறையலாம்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வரவு செலவு கணக்கில் அலட்சியம் காட்டக்கூடாது.

2 ஆடம்பரமான செலவுகளை ஒதுக்க வேண்டும்.

3 அன்றைய வேலையை அன்றே முடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2,9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! சிறப்பான நன்மைகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மற்றவர்களின் பொறாமை பார்வை பாதிப்பை கொண்டு வரலாம். இருந்தாலும் குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும் லாபம் கூடும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வப் பெருக்கு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலுக்கு உறவினர்கள் உதவி கிடைக்கலாம். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் இடையூறுகள் வரலாம். வருமானம் குறையலாம். சொந்தங்கள் தொந்தரவு தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொலைபேசி ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். 2 கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளவும். 3 வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் ஒரு பெரிய காரியத்தை முடிப்பீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் வெளியூர் நண்பர் உங்களுக்கு சாதகமான தகவலை தருவார். வேலை இடத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மன நிம்மதி ஏற்படும். இன்று உங்கள் பலம்: திட்டம் தீட்டி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு உதவி கிடைக்கலாம். குடும்ப ஒத்துழைப்பு கிடைக்கும் . இன்று உங்கள் பலவீனம்: நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். கடன் சுமை அதிகரிக்கும். வேலை இடத்தில் அழுத்தம் கூடும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 2 மேலதிகாரிகளின் மனம் அறிந்து நடக்க வேண்டும். 3 அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! சற்று இடையூறான பலன்கள் நடக்கும் நாள். மற்றவர்களின் விமர்சனங்களும் தொல்லைகளும் வியாபாரத்தை பாதிக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம். ஆனால் அதனால் பெரிய சிரமம் வந்துவிடாது. குடும்பம் தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். அலுவலகத்தில் நிதானமாக வேலை பார்க்க வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. விற்பனை சுமாராக நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பச் செலவு அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கிய பிரச்சனை உண்டாகும். இன்று உங்கள் பலம்: வேலையை முடிக்க வேகத்தோடு செயல்படுவீர்கள். அரசு உதவி கிடைக்கலாம். உறவினர்களின் ஆதரவு பெறுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: அடுத்தவர் பேச்சை அதிகமாக நம்புவீர்கள். வெளியூர் பயணங்கள் சிரமத்தை கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அலுவலகத்தில் பொறுப்பாக வேலை செய்ய வேண்டும். 2 தாமதமாக வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 3 மனைவியின் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! வெற்றிகரமான பலன் கிடைக்கும் நாள். சொந்தங்களோடு இருந்த நீண்ட நாள் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடங்கள் விலகி சந்தோஷம் பிறக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாகவும் செம்மையாகவும் எடுப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிகமான லாபம் கிடைக்கும். தாராளமாக கையில் பணம் புழங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக நன்மை அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலில் வெற்றிகரமான முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதி உதவி கிடைக்கலாம். சொந்தங்கள் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். விற்பனை குறையலாம். வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது. 2 இரவு நேர பயணங்களை ஒத்தி போடுவது நல்லது. 3 ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நாள். இருந்தாலும் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்து வருமானம் பெருகும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மறைமுக தொல்லைகளும் எதிர்ப்புகளும் ஏற்படலாம். பண வரவு அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு கூடும் . இன்று உங்கள் பலம்: சொந்தங்களின் உதவி கிடைக்கலாம். நிதானமாக தொழிலை திட்டமிடுவீர்கள். குடும்பத்துடன் இணக்கமாக இருப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரலாம். வெளியூர் பயணங்களால் சில சிக்கல்கள் உண்டாகலாம். மனைவி பக்கபலமாக இருப்பார். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அந்நிய பெண்களிடம் ஒதுங்கியே இருங்கள். 2 உறவினர்கள் வீட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம். 3 வரவு செலவுகளை கவனமாக எழுதி வைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! பெருமைகள் தேடி வரும் நாள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். மற்றவர்களின் பொறாமை பார்வை உங்கள் மீது விழும். அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை நன்றாக ஆலோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பொறுப்பும் அந்தஸ்தும் கூடும். வேலை மாறுதல் ஏற்படலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி வருமானம் அதிகரிக்கும் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு கேட்டது கிடைக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். இன்று உங்கள் பலவீனம்: தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் வரலாம். பணவரவில் தடை ஏற்படலாம். எதிர்பார்த்த செய்தி தாமதமாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 குடும்ப தேவைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். 2 பிள்ளைகளின் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 3 குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! தாமதமாக காரியம் நடக்கும் நாள். அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும். உயர் அதிகாரிகளின் மனநிலை அறிந்து நடக்க வேண்டும். குடும்பத்தில் சங்கடம் ஏற்படக்கூடும். இருந்தாலும் பெரிய சிரமங்கள் வராது. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட முடிவுகளை பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க முடியாது. செலவுகள் கூடும். வருமானக் குறைவு ஏற்படலாம். மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை உண்டாகலாம். பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் சுமாராக நடக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வேலை பளு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டு உதவி வந்து சேரலாம். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவி மனமறிந்து நடந்து கொள்வார். இன்று உங்கள் பலவீனம்: அரசாங்க காரியம் தாமதமாகும். தொழிலில் சில சிரமங்களை எதிர் நோக்கலாம். உறவினர்களால் சிரமம் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 எந்த வேலையும் ஒத்தி போட வேண்டாம். 3 சுறுசுறுப்பாக வேலையை முடிக்க பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! எதிர்பார்த்த செயல்கள் நடக்கும் நாள் இன்று. விற்பனையும் லாபமும் அதிகரித்து மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சங்கடங்கள் விலகும். தொழிலுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகளும் தொல்லைகளும் சரியாகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்றாக யோசித்து எடுக்க வேண்டும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் காரிய வெற்றி பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செல்வப் பெருக்கு அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் உத்தியோக உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: மிக நுட்பத்தோடு தொழிலை விரிவு படுத்துவீர்கள், அரசு ஆதரவு கிடைக்கலாம். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பார்கள் . இன்று உங்கள் பலவீனம்: தேவையில்லாத பொருட்களை வாங்கக்கூடாது. கடன் சுமை அதிகரிக்கலாம். வெளியூர் பயண வெற்றி தாமதப் படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள மோசடியில் மாட்டிக் கொள்ளாதீர்கள். 2 ஒன்றுக்கு மூன்றாக லாபம் வரும் என்பதை நம்பாதீர்கள். 3 ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்காதீர்கள். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! இன்று சற்று மிதமான பலன்களை நடக்கும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்படலாம். உடனிருந்தே சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். வேலை இடத்தில் சக ஊழியரின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வேலை மாறுதல் சம்பந்தமான முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வியாபாரத்தில் குறைவான வருமானமே கிடைக்கும். தேவைகள் அதிகரிக்கலாம். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வெளியூர் பயணங்கள் சிரமம் தரும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை இடத்தில் பிரச்சனை ஏற்படலாம் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். இன்று உங்கள் பலம்: சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம். குழந்தைகள் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் சில இடையூறுகள் வரலாம். பண வரவு குறையலாம். வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 முக்கிய வேலைகளை ஒத்தி போட வேண்டாம். 2 துடிப்போடு வேலைகளை செய்து முடிக்க பாருங்கள். 3 மனம் விட்டு பேசி குடும்ப குழப்பங்களுக்கு முடிவு கட்டுங்கள். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! வாய்ப்புகள் வீடு தேடி வருகின்ற நாள் இது. எதிர்ப்புகளை தாண்டி வியாபாரம் செழிக்கும். விமர்சனங்களை தகர்த்து எறிவீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு உண்டாகாது. தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. பதவி உயர்வு, பதவி மாற்றம் குறித்த வாய்ப்பு வரலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியங்கள் நிறைவேறும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாகன யோகம் கிடைக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் அரசு உதவி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டமிட்டு முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் பாசத்தில் திளைப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கலாம். இன்று உங்கள் பலவீனம்: பண வரவு செலவுகளில் சிக்கல் வரலாம். வெளியூரில் இருந்து வர வேண்டிய செய்தி தாமதமாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அந்தஸ்தை காட்ட ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். 2 அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 3 வரவு செலவு கணக்குகளை சரியாக எழுதி வைக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 15 – ஐப்பசி – பராபவ வருடம் ஞாயிறு நாள் ஞாயிறு திதி சப்தமி (up to 2:52 pm) அஷ்டமி (up to November 02, 1:11 pm) நட்சத்திரம் புனர்பூசம் (up to 5:39 am) பூசம் (up to November 02,4:30 am) ஆயில்யம் (up to November 03,3:46 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 3:15 – 4:15 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11.45 am / 1:30 – 2:30 am இராகு காலம் மதியம்ா 4.30 – 6.00 எமகண்டம் மதியம் 12.00 – 1.30 குளிகை மதியம் 3.00 – 4.30 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் மூலம் சூரியோதயம் 6:06 AM சூரிய அஸ்தமனம் 5:38 PM சந்திரோதயம் Nov 01 11:50 PM சந்திர அஸ்தமனம் Nov 01 12:04 PM