மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 23-2026

 

மேஷ ராசி அன்பர்களே! கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் நாள். தொழிலுக்கு இடையூறுகள் வரலாம். சிரமங்கள் ஏற்படலாம்ஹ ஆனால் அதையும் தாண்டி வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று சறுக்கல் ஏற்படலாம். பொருள் வரவு சுமாராக இருக்கும். அவசியமற்ற செலவுகள் வந்து சிரமப்படுத்தும். வேலை இடத்தில் சக ஊழியர்களால் தொந்தரவு உண்டாகும். கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுப்பது கடினம். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை அழுத்தம் பெறுவார்கள் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணி மாறுதல் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: அரசியல்வாதி ஒருவரின் நட்பு பக்க துணையாக இருக்கும். துணிச்சலோடு காரியத்தில் இறங்குவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் போக்கு மன சஞ்சலத்தை கொடுக்கும். எதிர்பார்த்த செய்தி வர தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு பயணங்களில் எச்சரிக்கை தேவை. 2 செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது. 3 குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! உயர்வான செய்திகள் வந்து சேரும் நாள். வேலை இடத்தில் உங்களின் திறமை பாராட்டப்படும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தொழிலில் புதிய பாதை அமையும். வருமானம் பெருகி மன தைரியம் உண்டாகும். வியாபாரம் மேன்மையாக நடக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருள் வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை வளர்க்க திட்டம் வகுத்து செயல்படுவீர்கள். அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை அதிகம் இருப்பதால் வீட்டில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் வந்து சேரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஜாமீன் கொடுப்பதில் நிதானமாக இருக்க வேண்டும். 2 வங்கிக்குச் செல்லும் போது பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். 3 வரவு செலவு கணக்குகளை முறையாக சரி பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நல்ல காரியங்கள் நடக்கும் நாள். தொழிலில் இருந்த இடையூறு விலகும். தொழிலுக்கு புதிய மூலதனம் போடுவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு உற்சாகத்தை தரும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: திட்டம் போட்டு மனத்திருவோடு காரியத்தில் இறங்குவீர்கள். தொழில் வெற்றிக்காக சலிப்பில்லாமல் உழைப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: சகோதரனின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது. உறவினர்களின் போக்கு எதிர்ப்பாக இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வரவு செலவு கணக்கில் கவனமாக இருக்க வேண்டும். 2 கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எச்சரிக்கை தேவை. 3 அவசரப்பட்டு வாக்குறுதி அளிக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்த இடையூறுகள் மாறும். வேலை இடத்தில் உங்கள் பெருமை வெளிப்படும். பண வரவு கூடும். உயர் அதிகாரிகளின் ஊக்கம் கிடைக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன யோகம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: பார்ட்னர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வெளிநாட்டில் இருந்து முக்கிய செய்தி வரும். இன்று உங்கள் பலவீனம்: குடும்பப் பிரச்சனை வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுத்தும். குழந்தைகளின் போக்கும் சங்கடப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நியாயமான கோபம் கூட பாதிப்பை கொண்டு வரும். 2 மற்றவர் விஷயத்தில் தலையிடக்கூடாது. 3 வேலை இடத்தில் சக ஊழியர்களிடம் பொல்லாங்கு பேசக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! சற்று மந்தமான பலன்கள் நடக்கும் நாள் இன்று. கூட இருப்பவரின் செயலால் உங்கள் செல்வாக்கு குறையும். வேலை பார்க்கும் இடத்தில் பணி அழுத்தம் கூடும். பதவி உயர்வு குறித்த பேச்சு வார்த்தை நடக்கும். பணி மாறுதல் ஏற்படலாம். வியாபாரத்தில் மிதமான லாபம் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். குறை கூறுபவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம். சந்திராஷ்டமம். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன அழுத்தம் அடைவார்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகள் கூடும்.

இன்று உங்கள் பலம்:

முதலீட்டுக்கு தேவையான பொருளாதாரத்தை தேடுவீர்கள். சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

அலைச்சல் காரணமாக இரவு தூக்கம் பாதிப்பு ஏற்படும். இனம் தெரியாத கவலை மனதை அரிக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க வேண்டும்.

2 சரியான நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும்.

3 கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! வெற்றி செய்திகள் கிடைக்கும் நாள். தொழிலில் மேன்மையான பலன் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் வியாபாரம் பெருகும். வேலை இடத்தில் பெருமை உண்டாகும். மங்கல செலவுகள் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு பெறுவார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெகுமானம் பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

பூர்வீக சொத்து கைக்கு வந்து கிடைப்பது. அரசு வேலைகள் தாமதம் என்று நடப்பது.

இன்று உங்கள் பலவீனம்:

அலைச்சல் காரணமாக உடல் சோர்வு உண்டாகும். பிள்ளைகளின் போக்கு மனக்கவலை தரும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வியாபார கணக்கு வழக்குகள் சரியாக பார்க்க வேண்டும்.

2 இணையதள மோசடியில் அகப்படக்கூடாது.

3 ஆன்லைன் சூதாட்டங்கள் பண இழப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 1,9

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறும் நாள். மன உறுதி தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். சற்று மந்தமாக வியாபாரம் நடக்கும். சகோதரர்களுக்காக பணம் செலவாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகும். வேலை இடத்தில் கவனக்குறைவு உண்டாகும். குடும்பத்தில் மனச்சங்கடம் ஏற்பட்டு மகிழ்ச்சி குறையும். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியசித்தி உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு தடைகள் விலகும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் போராட்டம் வெற்றி பெறும் . இன்று உங்கள் பலம்: நீங்கள் எதிர்பார்த்த உதவி தடாலடியாக கிடைக்கும். தொழிலுக்கு தேவையான கையிருப்பு தைரியத்தை கொடுக்கும்.. இன்று உங்கள் பலவீனம்: உங்களை கூறும் உறவினர்களை ஒதுக்க முடியாத நிலை. கொடுத்த வாக்குறுதி காப்பாற்ற முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பங்குச் சந்தை முதலீடுகளில் கவனம் தேவை 2 அதிக வட்டிக்குப் ஆசைப்பட்டு பணம் கொடுக்கக் கூடாது. 3 வேலை இடத்தில் வம்பு வழக்குகளில் சிக்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! சுப நிகழ்ச்சிகள் நடக்கும் நாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரம் செழித்தோங்கும். தொழில் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். அலுவலங்களில் உங்கள் ஆசை பூர்த்தியாகும். பதவி உயர்வு ஏற்படலாம். சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். நண்பரின் உதவி தாராளமாக இருக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மையான பலன்கள் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வாகன யோகம் கிட்டும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகளை கலைந்து எடுப்பீர்கள்‌ தொழிலுக்கான முக்கிய திட்டம் போடுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: ஞாபக மறதி உங்களை பாடாய்படுத்தும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை உருவாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வழியில் செல்லும்போது கவனமாக வீட்டை பூட்ட வேண்டும். 2 சாலையில் அலட்சியமாக கார் ஓட்டக்கூடாது. 3 அலுவலகத்திற்கு தாமதமாக செல்லக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! எதிர்பார்த்த நல்ல பலன்கள் வீடு தேடி வரும் நாள். தொழில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொழில்நுட்பத் துறையில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார மேன்மை ஏற்படும். வங்கி இருப்பு கூடும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மை உண்டாகும். பூராட நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு உயரும். இன்று உங்கள் பலம்: அரசு அதிகாரிகளின் உதவி உடனே கிடைப்பது. அரசாங்க வேலைகள் தாமதம் இன்றி நடப்பது. இன்று உங்கள் பலவீனம்: மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது. உறவினர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவது.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அவசியமற்ற செலவுகளை செய்யக்கூடாது. 2 கடன் வாங்கி இன்னொருவருக்கு கடன் கொடுக்கக் கூடாது. 3 ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆசைப்படக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! ஏற்ற இறக்கமான பலன்கள் நடக்கும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் சற்று தள்ளிப் போகலாம் வேலை இடத்தில் அழுத்தமான சூழ்நிலை உண்டாகும் வெளியூர் பயணங்களில் சில காரியம் தாமதமாகும் பண வரவு செலவுக்கு தகுந்தபடி அமையும் அரசு வேலைகள் சுணக்கமாக நடக்கும் ரியல் எஸ்டேட் தொழில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வியாபாரத்தில் சராசரியான லாபம் வந்து சேரும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்படலாம். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு காரிய தாமதம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலையில் அழுத்தம் கூடும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு கடன் பிரச்சனை உண்டாகும். இன்று உங்கள் பலம்: அரசு அதிகாரிகளின் ஆதரவு பக்க பலமாக இருக்கும். உறவினர்களின் ஒத்தாசையும் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: எதிர்பாராத செலவுகள் கை மீறிப் போகும். கைக்கு வரவேண்டிய பணம் காலதாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. 2 வாக்கு கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். 3 வரவு செலவு கணக்கு சரியாக எழுதப்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நாள். ரியல் எஸ்டேட் தொழில் நல்ல லாபம் தரும். தகவல் தொழில்நுட்பத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பண வரவு நினைத்தபடி இருக்கும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வேலை இடத்தில் சரளமான போக்கு காணப்படும். உங்களின் திறமை செல்வாக்கை கொண்டு வரும். தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு விரும்பிய காரியம் நடக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். இன்று உங்கள் பலம்: பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அரசியல்வாதியின் நட்பு பக்கபலமாக திகழும். இன்று உங்கள் பலவீனம்: தேவையில்லாத செலவுகள் வந்து சிரமப்படுத்தும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். 2 வேலை இடத்தில் வம்பு பேச்சு பிரச்சனையை கொண்டு வரலாம். 3 குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! நினைத்த காரியம் நிறைவேறும் நாள் நாள். நீங்கள் திட்டம் போட்ட செயல், தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் செய்த நுட்பங்கள் பலன் கொடுக்கும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சு செல்வாக்கை கொண்டு வரும். அரசியல் வட்டாரத்தில் பழக்கம் ஏற்படும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யப்படும். எதிர்ப்புகள் மறைந்து போகும். பதவி உயர்வு கிடைக்கலாம், விருப்பப்பட்ட வேலை மாறுதல் உண்டாகும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல செயல்கள் நடக்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் விரும்பியது நிறைவேறும். இன்று உங்கள் பலம்: தொழில் வெற்றி அடைய அயராது பாடுபடுவது. வருமானத்தைப் பெருக்க கடினமாக உழைப்பது. இன்று உங்கள் பலவீனம்: நெருங்கிய நண்பர் புரிந்து கொள்ளாமல் பேசுவது. ஆடம்பரமாக செலவு செய்வது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மனைவியின் தேவையை பூர்த்தி செய்வது. 2 பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவது. 3 முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 6 – ஐப்பசி – பராபவ வருடம் வெள்ளி நாள் வெள்ளி திதி துவாதசி (up to 2:36 pm) திரயோதசி (up to October 24, 1:37 pm) நட்சத்திரம் பூரட்டாதி (up to 9:03 pm) உத்திரட்டாதி (up to October 24,8:32 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 12:15 – 1:15 am / 6:30 – 7:30 pm இராகு காலம் காலை 10.30 – 12.00 எமகண்டம் மதியம் 3.00 – 4.30 குளிகை காலை 7.30 -9.00 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் மகம், பூரம் சூரியோதயம் 6:04 AM சூரிய அஸ்தமனம் 5:42 PM சந்திரோதயம் Oct 23 3:38 PM சந்திர அஸ்தமனம் Oct 24 4:03 AM