சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (22) மற்றும் ஸ்வீட்டி அக்தர் (25) ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மெக்காவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு. கடந்த அக்டோபர் 14ம்தேதி இளம் ஜோடியான இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பான விவரங்களை சவுதி அரசிடம் வங்க தேசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தேதி, நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்களை கோரியுள்ளது. இரண்டு பேருக்கும் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா, அல்லது வேறு ஏதாவது முறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டதா? விசாரணை மற்றும் வழக்கு விசாரணையின் போது அந்த இரு குடிமக்களுக்காக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனரா என்றும், அவர்கள் சட்ட உதவியை நாடினார்களா என்றும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.



