உஷார் உண்ணிக்காய்ச்சல் 4500க்கும் மேற்பட்டோர்பாதிப்பு

!

சமீபத்தில் அண்ணா பல்கலைகழக மாணவர் ஒருவர் உண்ணிக் காய்ச்சலால் உயிரிழந்த சோகம் தமிழக மக்களை அச்சப்பட வைத்திருக்கிறது. அதற்குக் காரணம், கடந்த ஒரு வாரத்தில் உண்ணிக் காய்ச்சலால் தமிழகத்தில் மட்டும் 4500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதே. இந்த உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் வரை இருக்கும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். எனவே, உண்ணிக்காய்ச்சல் பற்றி அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உண்ணிக்காயச்சல் எதனால் ஏற்படுகிறது. இது தொற்று நோயா.. உண்ணிக்காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும். தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் பொது நல மருத்துவர்களான மீனாட்சி சுந்தரி மற்றும் ஃபரூக் அப்துல்லா.புவியியல் காண்

 

எனப்படும் ஒரு பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது. இந்த நுண்ணுயிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்; ஏனெனில், இதனால் தானாகவே உயிர்வாழ முடியாது. எனவே, இது கடிப்பதன் மூலம் நம் உடலின் செல்களுக்குள் மறைந்துகொண்டு, அங்கிருந்து பெருகி வளரத் தொடங்குகிறது. இதனால், இது ஒரு வழக்கமான நுண்ணுயிரி தொற்றை விட, ஒரு வைரஸ் போலவே செயல்படுகிறது. ‘ஸ்க்ரப்’ என்ற சொல், இந்த நுண்ணுயிரி பொதுவாக உருவாகும் நிலப்பகுதியைக் குறிக்கிறது. அதாவது புதர்கள் அல்லது புற்கள் அடர்ந்து வளர்ந்த நிலப்பகுதிகளில்தான் இவை அதிகம் காணப்படுகின்றன. மேலும், இது ஒரு புதிய அல்லது அரிய நோயல்ல; தென்கிழக்கு ஆசியா உட்பட ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து காணப்பட்டு வரும் ஒரு நோயாகும்.

இது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவுவதில்லை. ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும்போதோ, இருமும்போதோ அல்லது உணவைப் பகிர்ந்துகொள்ளும்போதோகூட இது பரவாது. இது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிகச் சிறிய ஒட்டு உண்ணிகள்(mite) கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் அடர்ந்த புற்கள் நிறைந்த இடங்கள், காடுகள் போன்ற இடங்களில் வாழ்கிறது.

பெரும்பாலும் எலிகள், செல்ல பிராணிகளின் மீது இந்த உண்ணிகள் காணப்படுகின்றன. எனவே, ஒரு நபர் இவற்றுடன் தொடர்பு கொள்ளும்போது, அது அவருக்குத் தெரியாமலேயே மென்மையாக கடித்து, உடலுக்குள் பரவிவிடுகிறது. விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் அல்லது புதர்கள் மண்டிய நிலங்களில் நீண்ட நேரம் வேலைகள் செய்யும் நபர்கள் ஆகியோருக்கு இந்த நோய் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள்

அறிகுறிகளை வைத்து இந்நோயை அடையாளம் காண்பது சற்று சிக்கலானதே. ஸ்க்ரப் டைபஸின் ஆரம்பகட்ட அறிகுறிகள் சாதாரண காய்ச்சலில் இருந்து பெரிய அளவில் மாறுபடுவதில்லை; அதிக காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் குளிர் போன்றவையே ஏற்படும். இருப்பினும், இதில் ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது. அது என்னவென்றால், உண்ணி கடித்த இடத்தில் வலியற்ற ஒரு சிறிய கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்படும். இந்த நோய் பாதிப்பிற்கு உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது உடலில் தடிப்புகள், நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதோடு, தீவிரமான நிலைகளில் மூச்சுத் திணறலுக்கும் மற்றும் மனக்குழப்பத்திற்கும் வழிவகுக்கலாம்.

மேலும், நுரையீரல் (ARDS), இதயம் (மையோகார்டிடிஸ்), சிறுநீரகம் (கடுமையான சிறுநீரக பாதிப்பு), மூளை (மெனிங்கோஎன்செபாலிடிஸ்) மற்றும் கல்லீரல் (ஹெபடைடிஸ்) போன்ற பல உறுப்புகளைப் பாதிக்கலாம். டெங்கு காய்ச்சலைப் போலவே, இது ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் தீவிரமான நிலைகளில், ரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறைதல் பிரச்சனைகளுடன் கூடிய ‘டிஐசி’ (DIC) என்ற நிலையையும் ஏற்படுத்தக்கூடும்.

கடுமையான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிப்பு தேவைப்படலாம். இருப்பினும், நோயை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் மூலம் தீவிரமான சிக்கல்களைத் தடுத்து உயிரைக் காப்பாற்ற முடியும்.

இது குணப்படுத்தக்கூடியதே

மேலும், இதற்குச் சிகிச்சையளிப்பது மிகவும் எளிதானது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் ‘டாக்ஸிசைக்ளின்’ என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி மூலம் இதற்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கலாம். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ‘அசித்ரோமைசின்’ மருந்து வழங்கப்படுகிறது. மருந்தை உட்கொள்ளத் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தெரியும். சிகிச்சை பெறாமல் காலதாமதம் செய்வது மட்டுமே இதில் உள்ள ஒரே ஆபத்தாகும். ஏனெனில், அப்போதுதான் நோயின் தீவிரம் அதிகரித்து, அது உங்கள் நுரையீரல், சிறுநீரகம் அல்லது மூளையைக்கூட

ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுதான் இந்த ஸ்க்ரப் டைபஸ் எனும் உண்ணிக்காய்ச்சல். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இந்த பாக்டீரியா காணப்பட்டாலும் கிழக்கே பாகிஸ்தான், மேற்கே ஜப்பான், தெற்கே ஆஸ்திரேலியா இந்த மூன்று நாடுகளை மூன்று புள்ளிகளாகக் கொண்டு முக்கோணம் வரைந்தால் அது ‘சுட்சுகாமுஷி முக்கோணம்’ என்றழைக்கப்படுகிறது.

இந்த முக்கோணம் இருக்கும் பகுதியில் வருடந்தோறும் சுமார் பத்து லட்சம் பேருக்கு ஸ்க்ரப் டைஃபஸ் நோய் ஏற்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் அறிகுறியில் நான்கில் ஒன்று ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலாக இருக்கிறது. தமிழ்நாடும் இந்த சுட்சுகாமுஷி முக்கோணத்துக்குள் வருவதால் ஸ்க்ரப் டைஃபஸ் பாதிப்பு தமிழ்நாட்டிலும் பரவி இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.புவியியல் காண்

உண்ணிகளில் இந்த பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட உண்ணிகள் மனிதனைக் கடிக்கும்போது மனிதனுக்குப் பரவுகிறது. மனிதனன்றி பூனை, நாய், எலி போன்ற விலங்குகளிடமும் இந்த பாக்டீரியா தொற்றை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த டிக் மைட் வகை உண்ணி பாதிப்புக்குள்ளான வளர்ப்புப் பிராணிகளிடம் நெருங்கிப் பழகும் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.அதே சமயம் இந்தத் தொற்று ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு வேறு வழிகளில் பரவுவதில்லை என்பதால், இது தொற்று நோய் இல்லை.

உண்ணிக்காய்ச்சலின் சிகிச்சை முறையும் தடுப்பும்

உண்ணிக்கடி ஏற்பட்ட நாளிலிருந்து பதினான்கு நாட்களில் காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், நெறிகட்டிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் வந்தவுடன் கவனிக்காமல் விட்டால், இரண்டாவது வாரம் பிதற்றல் நிலை, நியூமோனியா, குழப்ப நிலை, கோமா, திடீர் சுவாச செயலிழப்பு, மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.

மேற்சொன்ன அறிகுறிகளுடன் கூடவே உண்ணி கடித்த இடம் சிவந்து சிகரெட்டில் சுட்டது போன்ற நீள்வட்டமான புண் உருவாகும். பிறகு அந்தப் புண் கருப்பு நிறத்தில் உலரும். அந்த நிலையை ‘எஸ்கர்’ என்பார்கள். இந்த எஸ்கர் நமது உடலில் கதகதப்பும் வேர்வை சுரப்பும் ஒன்றாக இருக்கும் கழுத்து, கக்கம், அக்குள் போன்ற இடங்களில் தென்படலாம். தொப்புளுக்குக் கீழே இந்தப் புண் இருக்கலாம். பெண்களைப் பொருத்தவரை மார்பகங்களிலும் மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதியிலும் இந்தப் புண் ஏற்படலாம்.

வயது முதிர்ந்தோர், ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு கொண்டவர்கள் மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த இணை நோய்களைக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்படும்போது தீவிரத்தன்மையுடன் வெளிப்படும் வாய்ப்பு உண்டு.இந்த உண்ணிக் காய்ச்சலை தடுக்க இப்போது நம்மிடையே தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே, இத்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்வழி இத்தொற்றுகளை ஏற்படுத்தும் உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதே. மேலும், நமது வீடுகளில் உபயோகப்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை அவ்வப்போது துவைத்து சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

சுற்றுப்புறங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டுத் தோட்டத்தில் புற்கள் உயரமாக வளர்ந்திருந்தால், அதை தரையோடு வெட்டிவிட வேண்டும். மேலும், உண்ணிகள் வளராதவாறு உண்ணிக் கொல்லி மருந்துகளை நமது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும்.விவசாய நிலம் அல்லது அடர்ந்த தாவரங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்ற பிறகு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லவும் என்றார்.