இந்தியாவில் 7 பேர் உயிரிழப்பு அர்னாப்’ சூறாவளியின் தாக்கம் பாதிப்பு

 

 

வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவுக்குள் பிரவேசித்த ‘அர்னாப்’ சூறாவளியின் தாக்கத்தினால் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கலாச்சாரம் காண்

இச்சூறாவளி காரணமாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 1,097 கிராமங்களைச் சேர்ந்த 830 குடும்பங்களைச் சார்ந்த 59,028 பேர் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான காற்று மற்றும் தொடர் மழை காரணமாக இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களின் மொத்த மதிப்பு இந்திய ரூபா 4,600 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று வெள்ளிக்கிழமை (30) பெய்த கடும் மழையின் காரணமாக ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கந்தமால் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பஞ்ஜகர் பகுதிக்குட்பட்ட ‘கிடிபபாலி’ என்ற மலைக்கிராமத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மொத்தமாக 26 பேரை மட்டுமே கொண்ட இந்தக் கிராமத்தில் மண்சரிவில் சிக்கி 12 பேர் வரை காணாமல் போயுள்ளதாகப் இந்திய பிராந்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மழைக்கு மத்தியிலும் கிராம மக்கள் 13 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும், மண்சரிவு ஏற்பட்ட வேளையில் கிராமத்தில் தங்கியிருந்த மற்ற 13 பேரில் ஒருவரை மட்டுமே மீட்டு நிவாரண முகாமிற்கு அனுப்ப முடிந்துள்ளது.

காணாமல் போனதாகக் கருதப்படும் 12 பேரைக் கண்டறியும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்னாப் புயலின் இரவுநேர செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

தீவிர புயலாக உருவெடுத்த ‘அர்னாப்’ ஆந்திரப் பிரதேச மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கிய போது, NOAA-20 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இரவுநேரச் சாட்டிலைட் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் முதல் பெயரிடப்பட்ட சூறாவளி புயல்கள் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு, எல் நினோ (El Niண்o) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் நிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாக, அக்டோபர் 25 அன்று வங்காள விரிகுடாவில் சற்று தாமதமாகவே அர்னாப் புயல் உருவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை 1:42 மணியளவில் NOAA-20 செயற்கைக்கோளில் உள்ள VIIRS (Visible Infrared Imaging Radiometer Suite) இந்த இரவு நேரப் படத்தை எடுத்தபோது, இந்திய வானிலை மையத்தின் (IMD) கூற்றுப்படி, புயலின் தொடர் காற்று வேகம் மணிக்கு சுமார் 140 கிலோமீற்றராக (85 மைல்கள்) இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலாச்சாரம் காண்

அக்டோபர் 28 அதிகாலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்பகுதியில் அர்னாப் கரையை கடந்தபோது, அதன் தொடர் காற்று வேகம் மணிக்கு 130 கிலோமீற்றராக இருந்துள்ளது. IMD இந்த வலிமை கொண்ட புயலை “மிகக் கடுமையான சூறாவளிப் புயல்” (very severe cyclonic storm) என வகைப்படுத்துகிறது. இது சாபிர்-சிம்ப்சன் சூறாவளி காற்று அளவுகோலில் பிரிவு 1 ) புயலுக்கு இணையானது.

இது பெரிய நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் மீனவ சமூகங்கள் வாழும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பமான நீர்நிலைகள் காணப்படும் எல் நினோ (El Niண்o) என்ற காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் இப்புயல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு தோராயமாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது எனலாம்.